டாலிவுட்டின் பிரபல இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. உலகம் முழுவதும் இளைஞர்களால் வெறித்தனமாக போற்றப்பட்ட இப்படத்தின் தமிழ் ரீமேக் உருவாக்கத்தில் இயக்குநர் பாலா களமிறங்கினார்.
Advertisment
Advertisements
வர்மா என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் நடிகர் விக்ரம் மகன் துரூவ் விக்ரம் நடித்திருக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரின் ரிமேக்கிற்காக காத்திருந்த பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அர்ஜுன் ரெட்டி படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பார்த்த படம். அப்படம் தமிழில் ரீமேக் ஆவதாக அறிவிப்புகள் வந்த நாள் முதலே அதற்காக எதிர்பார்ப்பு ஈடுசெய்ய முடியாததாக இருந்தது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ஏமாற்றம் மட்டுமே தந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பாலா ரசிகர்கள் வழக்கம்போல் இதனை ஒரு தெய்வீகப் படைப்பாகவே கருதுகின்றனர்.