scorecardresearch

இயக்குனர் பாலா படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்: காரணம் பற்றி பாலா பரபரப்பு அறிக்கை

வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம் – இயக்குனர் பாலா அறிக்கை

இயக்குனர் பாலா படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்: காரணம் பற்றி பாலா பரபரப்பு அறிக்கை

கதையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சூர்யாவுக்கு பொருந்தாது என்பதால், சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியுள்ளார் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதையும் படியுங்கள்: தீ தளபதி… வெளியானது வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள்; ரசிகர்கள் உற்சாகம்

என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

நந்தாவில் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்காண் படப்பணிகள் தொடரும். இவ்வாறு இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director bala says surya steps down from vanangaan movie