Into the wild with Bear Grylls : நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட, தொலைக்காட்சி நிகழ்ச்சியான ”இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்”ஐப் பார்க்க, அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் அவர்களின் எதிர்பார்ப்புக்கு இன்னும் தீனி போட்டிருக்கிறது. உற்சாகத்தை மேலும் தூண்டும் வகையில், ‘டான்ஸ் சேலஞ்சை’ தொடங்கியுள்ளது. இந்த சவாலில் முதன் முதலில் ஆர்வம் காட்டிய நபர் பியர் கிரில்ஸ் தான்.
அண்ணாவின் தம்பி, கலைஞரின் அண்ணன் : க.அன்பழகன் அரிய படங்கள்
நேற்று (வெள்ளிக்கிழமை) டிஸ்கவரி சேனலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும், ஒரு மாஸான கொண்டாட்டம்! சவாலை எடுத்துக் கொண்டு பார்ட்டியில் சேரவும். Http://discoverychannel.co.in/thalaivaondiscovery -லிருந்து பாடலைப் டவுன்லோடு செய்து, அதற்கேற்றபடி உங்கள் நடன நகர்வுகளை #ThalaivaOnDiscovery உடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மார்ச் 23 அன்று இரவு 8 மணிக்கு நிகழ்ச்சியை கண்டு களியுங்கள்” என்று தெரிவித்திருந்தது.
அதற்கு பதிலளித்த பியர் கிரில்ஸ், ”என்னை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பெறும், ”இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸின்” டீஸர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. எபிசோட் மார்ச் 23 அன்று இரவு 8 மணிக்கு டிஸ்கவரியில் ஒளிபரப்பப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கீழ்ப்பாக்கம் இல்லத்தில் தலைவர்கள்-தொண்டர்கள் அஞ்சலி
ரஜினிகாந்த் முன்னதாக ’இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் தனது தொலைக்காட்சி அறிமுகத்தைப் பற்றி ஒரு அறிக்கையைப் பகிர்ந்து கொண்டார். “பியர் கிரில்ஸ் பல பிரபல விருந்தினர்களின் உயிர்வாழும் திறன்களை சோதித்துள்ளார். மயக்கும் வனப்பகுதியில் உயிர்வாழும் சவாலை நான் எதிர்நோக்குகிறேன். ” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.