Advertisment
Presenting Partner
Desktop GIF

திரெளபதி விமர்சனம் : காதல் திருமணம் மீதான அச்சத்தை தூண்டும் கதை

தனக்கு பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது என குறிப்பிட்ட பெண்ணுக்கே தெரியாமல் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Draupathi review rating

Draupathi review rating

Draupathi Review : ’பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தின் இயக்குநர் மோகன். ஜி இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘திரெளபதி’. ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

ரஜினிகாந்துடன் ஹஜ் அசோசியேஷன் தலைவர் சந்திப்பு

திரெளபதி படத்துக்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, தேவராஜ் எடிட்டராக பணியாற்றியிருக்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் இசையமைத்துள்ளார். கிரவுட் ஃபண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட திரெளபதியின் ட்ரைலர் வெளியாகி பெரும் விமர்சனங்களை உருவாக்கி, இணையத்தில் பேசு பொருளானது.

ட்ரைலரே இப்படியென்றால், முழு படமும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அப்போதே அதிகரித்தது. இந்நிலையில் நேற்று திரெளபதி திரைப்படம் வெளியானது.

தன் மனைவி திரெளபதியையும் (ஷீலா), அவருடைய தங்கை லட்சுமியையும் ஆணவக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன் (ரிச்சர்ட்) பிணையில் வெளி வருகிறார். பின்னர் சென்னைக்கு சென்று டீ விற்பவரை போல வேடமிட்டு மீண்டும் 2 கொலைகளை செய்கிறார். அவர் உண்மையிலேயே ஆணவக் கொலை செய்தாரா, அவரால் கொல்லப்பட்டவர்கள் யார், எதற்காக இந்த கொலைகளை செய்தார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

சென்னை ராயபுரம், சென்னை வடக்கு ஆகிய இரண்டு பதிவாளர் அலுவலகங்களில் 3,500க்கும் மேற்பட்ட திருமணங்கள் மோசடியாக பதிவுசெய்யப்பட்டன. இந்த சம்பவங்களில் பதிவாளர்களை வழக்கறிஞர்கள் வலியுறுத்தி பெண்ணும் மாப்பிளையும் இல்லாமலேயே திருமணங்களைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.இப்படி திருமணம் பதிவான பிறகு, அந்தத் திருமணத்தில் மாப்பிளையாக பதிவுசெய்யப்பட்டவர் நீதிமன்றங்களை அணுகி, தன் மனைவியை யாரோ சட்டவிரோதமாக அடைத்துவைத்திருப்பதாகவும் மீட்டுத்தர வேண்டுமென்றும் வழக்குத் தொடர்வார். இப்படியான சூழலில் தனக்கு பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது என குறிப்பிட்ட பெண்ணுக்கே தெரியாமல் இருக்கும்.

நாயகனை காவல்துறை பிடித்து எதற்காக கொலை செய்தீர்கள் எனக் கேட்கும் போது, ஒரு இளைஞனைக் குறிப்பிட்டு, அவனால் தன் குடும்பமே மிகவும் கஷ்டப்பட்டதாக சொல்கிறார் பிரபாகரன். அந்த இளைஞனை அழைத்து வருகிறார்கள். இருவரும் மாறி மாறி ஃப்ளாஷ் பேக் சொல்கிறார்கள். இதற்கிடையே நாயகன் செய்த 2 கொலைகளையும் போலீஸ் மறந்து விடுகிறது.

இடைவேளைக்குப் பிறகு கதாநாயகி பேசும் வசனங்களில் பல அபத்தமாக இருக்கின்றன. ஒரு கட்டத்தில் அவர் பேசும் வசனம், நம் காதை பதம் பார்க்கிறது. இருந்தாலும் சில காட்சிகளின் மிகை நடிப்பை தவிர, மற்ற இடங்களில் நாயகியின் நடிப்பு எடுபடுகிறது.

2020 லீப் ஆண்டு : தாவி மகிழும் ‘கூகுள் டூடுல்’

நாயகி கொலையான பிறகு வக்கீலாக வரும் கருணாஸும் தன் பங்கிற்கு வசனமாக பேசி பார்வையாளர்களை மீண்டும் சோதிக்கிறார். ரிச்சர்ட் சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். பழிவாங்கும் கதையாகவே எடுத்திருக்கலாம் திரெளபதியை...

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Tamil Movie Review
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment