Editor Sreekar Prasad : திரைப்பட படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் 17 மொழிகளில் பணியாற்றியதற்காக, லிம்கா புத்தக ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். படத்துடன் கூடிய இந்த செய்தியை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர்களை காதலித்து கரம் பிடித்த நடிகைகள் – கலர்ஃபுல் படங்கள்!
அந்த 17 மொழிகள், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, சிங்களம், கர்பி, மிஷிங், போடோ மற்றும் பங்க்சென்பா ஆகியவைகளாகும். "ஒரு இந்தியராக இருப்பது அதிர்ஷ்டம், பல மொழிகள் ஆனால் ஒரே உணர்வுகள்" என தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.
வேகம் எடுக்கும் மதுரவாயில் – துறைமுகம் எக்ஸ்பிரஸ் வே! எப்போது முழுமையடையும் இந்த திட்டம்?
8 தேசிய விருதுகளை வென்றுள்ள இவர், அலைபாயுதே (2000), தில் சஹ்தா ஹை (2001), கண்ணத்தில் முத்தமிட்டால் (2002), ஒக்கடு (2003), ஆயுத் எழுத்து / யுவா (2004), நவராசா (2005), குரு (2007), ஃபிராக் (2008) மற்றும் தல்வார் (2015) உள்ளிட்ட படங்களில் சிறப்பாக பணியாற்றியிருப்பார். தற்போது இந்தியன் 2 மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தவிர, தர்பார், துப்பாக்கி, புலி, கத்தி, சர்கார் உள்ளிட்ட படங்களிலும் இவர் எடிட்டராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"