Eeramana Rojave : மார்ச் 8 மகளிர் தினம்.. ஆனால், இந்த மார்ச் மாசமே முடிய போகுது. சீரியலில் இப்போ தான் மகளிர் தின வாழ்த்து சொல்றாங்க. கேட்டுக்க வேண்டியதுதான். ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றியும் மலரும் செய்த காதல் லீலைகள் வீட்டுக்கே தெரிஞ்சு போச்சு. வெற்றி காட்டுக்கு போயிட்டு, மலர் நினைவு வந்துருச்சு. காதல் வாட்டி எடுக்குதுன்னு பின் வாசல் வழியா வந்து ஏணி வச்சு ஏறி ரூமுக்குள்ளே போயி காதல் செய்தான்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு கொரோனா! அதிர்ச்சியில் அரச குடும்பம்…
அறைக்குள்ளே பேச்சு சத்தம் கேட்குதுன்னு ஒட்டுக் கேட்ட நாத்தனார் ஈஸ்வரி, சித்திக்கிட்டே போயி போட்டுக் கொடுத்துட்டா. இதுல வேற அம்மா மகன் வெற்றி மேலயும், மருமகள் மலர் மேலயும் தீராத கோவத்துல இருக்காங்க. என்ன ஆனாலும் சரி.. மலரை மருமகளா சேர்த்துக்கறதில்லை. வெற்றியும் பொண்டாட்டி மயக்கத்தில் இருக்கான்னு வெறுப்பில் இருக்காங்க.
???? அற்புதம்! ????
ஈரமான ரோஜாவே – இன்று மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #EeramaanaRojaave #VijayTelevision pic.twitter.com/rAEgLtfXVf
— Vijay Television (@vijaytelevision) March 25, 2020
திடீர்னு வந்து, அம்மா உங்களுக்கு நான் எதாவது ஹெல்ப் பண்றேம்மான்னு வெற்றி கேட்க, ஏம்பா.. உனக்கு உன் பொண்டாட்டிக்கு விதம் விதமா தோசை சுட்டு குடுக்கும் வேலை எல்லாம் இல்லையா? எனக்கு எதுக்குப்பா உன்னோட உதவின்னு நக்கல் அடிக்கறாங்க. ஆமாம்.. வெற்றி மலரை உட்கார வச்சு கேரட் தோசை, தக்காளி தோசை, முட்டை தோசைன்னு விதம் விதமா சுட்டுக் கொடுத்தது அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு போலும். அப்போது தான் மலர் வெற்றி, அகிலா, புகழ் நாலு பேரும் ஒரு முடிவுக்கு வர்றாங்க. எப்படியாவது அம்மாவை சமாதானப் படுத்த வேண்டும் என்று.
கொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு! நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
அதோட விளைவுதான்.. இன்னிக்கு மகளிர் தினமாம், அதுக்கு வாசலில் பெரிய கோலம் போட்டு அம்மாவுக்கு நன்றி சொல்லி வெற்றி அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுக்கறான். குடும்ப தலைவியா எவ்ளோ தியாகம் பண்ணி இருக்கீங்கன்னு சைடு கேப்பில் அவங்க டிவி சீரியல் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் ஹோம் அட்வார்டைசிங் பண்ணிட்டாங்க. ஷூட்டிங் இல்லையே…எதையாவது போட்டு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”