Enai Noki Paayum Thota Full Movie Download Tamilrockers, Enai Noki Paayum Thota tamil movie Download, எனை நோக்கி பாயும் தோட்டா, தமிழ் ராக்கர்ஸ், ENPT, ENPT Full Movie
Enai Noki Paayum Thota Full Movie Leaked In TamilRockers: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரிலீஸான அன்றே ஆன் லைனில் வெளியிட்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதனால் படக் குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். படத்தின் கலெக்ஷனை இது பாதிக்கும் அபாயம் இருக்கிறது.
Advertisment
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், புதிய படங்களை ரிலீஸ் அன்றே ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அதற்கு லேட்டஸ்ட் பலி, எனை நோக்கி பாயும் தோட்டா.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் மேகா ஆகாஷ், சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 2016-ல் தொடங்கப்பட்ட இப்படம், நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று (நவம்பர் 29) ரிலீஸ் ஆனது.
Advertisment
Advertisements
ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..
லேட்டாக வந்தாலும், கவுதம் வாசுதேவ மேனனுக்கே உரிய கிளாஸ், தனுஷின் நடிப்பு ஆகியன இதிலும் பேசப்படுகின்றன. படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ரிவ்வியூ கிடைத்திருக்கிறது. இதனால் பாக்ஸ் ஆபீஸிலும் இந்தப் படம் சாதனை படைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் வழக்கம்போல இந்தப் படத்தையும் ரிலீஸான இன்றே தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். படத்தின் கலெக்ஷன் பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு தடை கேட்டு பலரும் போராடி வந்தாலும், இதுவரை அதில் முடிவு கிடைக்கவில்லை. அவ்வப்போது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தொடர்ந்து புதுப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருகிறது. எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்கும் அதுதான் நடந்திருக்கிறது.
ஏற்கனவே தனுஷின் அசுரன், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை, விஜய்யின் பிகில் உள்ளிட்ட முக்கியப் படங்கள் பலவற்றையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.