/tamil-ie/media/media_files/uploads/2020/06/Actress-Usha-Rani-passed-away.jpg)
Actress Usha Rani passed away
பழம்பெரும் நடிகை உஷாராணி உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். சென்னை அயப்பாக்கத்தில் வசித்து வந்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.
அவமானம், அவமதிப்பு, புறக்கணிப்பு, வலி, கண்ணீர் – ஜோசப் விஜய்யின் குட்டி ஸ்டோரி
உஷா ராணி குழந்தை நட்சத்திரமாக 12 வயதிலேயே நடிக்க தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியின் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் ஜோடியாக குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்பட தமிழில் 50 படங்களில் நடித்துள்ளார்.
கோவை ஜிஆர்டி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா: சென்னையில் இருந்து வந்தவர்கள்
மலையாள இயக்குநர் என்.சங்கரன் நாயரின் மனைவியான உஷா ராணி, மலையாளத்தில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விஷணு விஜயம், பிரமிளா நடித்த தம்புராட்டி, பிரேம் நசீரின் ஒரு ஜென்மம் கூடி உள்பட 40 படங்களை இயக்கி உள்ளார் சங்கரன். தன்னை விட 30 வயது மூத்தவரான இவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் உஷா. 1971-ல் நடந்த இந்த திருமணம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் சங்கரன் மறைந்தார். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகன் இருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.