game of thrones, kristofer hivju covid 19 positive
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹாலிவுட் தொடரான 'கேம் ஆப் த்ரோன்ஸ்' சீரியலுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலில் டோர்மண்ட் வேடத்தில் நடித்த நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் தற்போது நார்வேயில் வசித்து வருகிறார், கொரோனா பாஸிட்டிவ் செய்தியைக் கேட்டதும் சுயமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம், "நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் - எனக்கு சளி அறிகுறி மட்டும் இருந்தது. இந்த வைரஸ் பேரழிவு தரும் நோயாக இருக்கக்கூடும் என அதிக ஆபத்துக்கு உள்ளவர்கள் கூறுகிறார்கள். எனவே நீங்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கைகளைக் கழுவுங்கள், மற்றவர்களிடமிருந்து 1.5 மீட்டர் தள்ளி இருங்கள், அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். வைரஸ் பரவாமல் தடுக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். நாம் ஒன்றாக இணைந்து இந்த வைரஸை எதிர்த்துப் போராடலாம். தயவுசெய்து உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் தூரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.