எஸ்.சுபகீர்த்தனா
’இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கதைகள் நிறைந்தவர்’, அவரைச் சந்தித்த எவரும் இப்படித்தான் சொல்வார்கள். புதுவித படங்களை ரசிகர்களுக்குக் கொடுத்த ட்ரெண்ட் செட்டர். தன்னைச் சுற்றியுள்ளவர்களைக் கவனித்து, அவர்கள் மூலம் திரையில் அழகான கதைகளை உருவாக்குகிறார். ‘காக்க காக்க’, ’வாரணம் ஆயிரம்’ அல்லது ’விண்ணைத்தாண்டி வருவாயா (விடிவி)’ என இவரின் படங்கள் ஒவ்வொன்றும் ட்ரெண்ட் செட்டர்கள் தான். அவரின் 47-வது பிறந்தநாளில் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
‘ஆபத்தான நிலையை எட்டிய டெல்லி; ராணுவத்தை அனுப்புங்கள்’ – முதல்வர் கேஜ்ரிவால்
கடந்த காலத்தை புரட்டுவோம். நீங்கள் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த போது வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்தீர்களா?
இல்லை, இன்று நான் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது சாதாரணமாக நடந்ததாக நான் சொல்லவில்லை. ஆனால் இவை அனைத்தும் நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பாடல் அல்லது, ஸ்கிரிப்ட் என நான் கொண்டு வருவது அந்த நேரத்தில் நான் ஃபீல் பண்ணுவதை அடிப்படையாகக் கொண்டது தான். பொதுவாக, நான் எண்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. பல திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு கனவுப் படம் இருக்கும். ஆனால் எனக்கு இல்லை. கமல் சாருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் ‘வேட்டையாடு விளையாடு’ எனது மூன்றாவது படமாக அமைந்தது. நான் ராஜீவிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, என் காதலியிடம் (இப்போது என் மனைவி), “எனது முதல் படத்தை இயக்கிவிட்டு திருமணம் செய்துக் கொள்ளலாம். இப்போது என்னிடம் பணம் இல்லை” என்றேன். அவள், “அதற்கு பணம் தேவையில்லை” என்றாள். நம்புங்கள், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்! நான் எதையும் திட்டமிடுபவன் அல்ல. நான் வெறுமனே வாழ்க்கை ஓட்டத்துடன் செல்கிறேன்.
நான் கவனித்த ஒன்று. சில நேரங்களில் உங்கள் ஹீரோக்கள் கெளதம் வாசுதேவ் மேனனாகவே மாறிவிடுகிறார்கள். கையில் காப்பு அணிகிறார்கள், உங்களைப் போலவே ஹேர் ஸ்டைலும் வைத்துக் கொள்கிறார்கள்
தனுஷிடம், “நீங்கா என்ன மாதிரியே பேசணும்!” என்று நான் சொல்வதை கற்பனை செய்து பாருங்கள். (சிரிக்கிறார்) நீங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அது ஒருபோதும் வேண்டுமென்றே நடப்பது இல்லை. சூர்யா, ஓரளவிற்கு, என் உடல்மொழியைப் பின்பற்றுகிறார். பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்திருப்பதால் அது நடக்கிறது. ஆனால் இது கமல் சாரிடம் அப்படியிருக்காது. அவர் எப்போதும் நமக்கு தேவைக்கு அதிகமாகவே தருவார். ஆனால் நடிகர்கள் அவர்களின் முந்தைய படங்களிலிருந்து வித்தியாசமாக தோற்றமளிக்க வேண்டும் என்பதில் நான் கான்ஷியஸாக இருப்பேன்.
ENPT -ல் தனுஷின் வாய்ஸ் ஓவர் குறித்த விவாதம் தொடர்கிறது
காக்க காக்க படத்தில் சூர்யாவின் குரல் படத்தை விவரிக்கும். விடிவி-யில், சிம்புவின் குரலாக இருந்தது. அச்சம் என்பது மடமையடாவிலும் இது இருக்கும். அதே போல் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் இப்படியான வாய்ஸ் ஓவர் இருக்கும். இவற்றில் யாருக்கும் பிரச்சினைகள் இல்லை. ஆனால் வித்தியாசமாக, ENPT-ல் மட்டும் வாய்ஸ் ஓவர் தொந்தரவு செய்ததாக சொல்கிறார்கள். ஏனென்று எனக்குத் தெரியவில்லை.
ஐசரி கணேஷ் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியீட்டிற்கு உதவினார். அதனால்தான் அவரது மருமகன் வருணை வைத்து படம் இயக்குகிறீர்களா?
இல்லை. ஐசரி கணேஷை ஒரு கல்வியாளராகவும், திரைப்பட ஆர்வலராகவும் எனக்குத் தெரியும். என் குழந்தைகள் அவருடைய பள்ளியில் படித்தார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வருணை ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்த முடியுமா என்று ஐசரி கணேஷ் கேட்டார், ஆனால் நான் சரியான நேரத்திற்காக காத்திருந்தேன், அதுதான் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் நடந்தது. நான் ஐசரி கணேஷிடம் ENPT -ஐக் காட்டினேன். அவர் கண்டெண்டை விரும்பி அதை வெளியிட்டார்.
நீங்கள் விஜய்யிடம் கூறிய கதை தான் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படமா?
இல்லை இரண்டும் வெவ்வேறு. இதில் வருண் கையாள நிறைய இருக்கும்.
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை பூர்த்தி செய்வது ஈஸியான விஷயம் இல்லை. அதனால் தான் நீங்கள் இன்னும் ரஜினி, விஜய்யுடன் வேலை செய்யாமல் இருக்கிறீர்களா?
நானும் விஜய்யும் ஏற்கனவே டிஸ்கஸ் செய்திருக்கிறோம். அவர் முழு விவரம் கேட்டார். நான் அவருக்கு கதையைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதில் கன்வீன்ஸ் ஆகவில்லை. “இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு!” என்றார். நான் அவரை முழுமையாக புரிந்துகொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகராக, தாங்கள் நடிக்கும் கதைகளில் கம்ஃபர்டபிளாக இருக்க வேண்டும். விஜய்க்கு சொன்ன அந்தக் கதை இங்கிலாந்தில் எடுக்கப்படவிருந்தது. கதாநாயகன் ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். நான் ஜேம்ஸ் பாண்ட் போன்ற அதிரடி லுக்கில் விஜய்யைப் பார்க்க விரும்பினேன். ’துருவ நட்சத்திரத்தை’ ரஜினி சாருக்கு சொன்னேன். கதையைக் கேட்ட அவர், “சூப்பர், ரொம்ப நல்லா இருக்கு. ஹாரிஸ் ஜெயராஜை போட்டுருவோம்” என்றார். நான் சூப்பர்ஸ்டாரை இயக்குகிறேன் என்பதை தாணு சாரும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் அதே நாள் மாலையில், அந்தப் படம் நடக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக, ரஜினி சார் கபாலியைத் தேர்ந்தெடுத்து, பா. ரஞ்சித்துடன் ஒப்பந்தமாகிவிட்டார் என்றும் என்னிடம் தெரிவித்தார் (புன்னகையுடன்).
அழகுக்கு மேலும் அழகு சேர்த்த இந்திய காதி… ஜனாதிபதி மாளிகையில் இவான்கா!
கமல்ஹாசன், அஜித், விக்ரம், சிம்பு, சூர்யா உள்ளிட்ட அனைத்து சிறந்த நடிகர்களையும் இயக்கியுள்ளீர்கள். எல்லாவற்றிலும் சிறந்தவர் யார்?
சூர்யா மிகவும் ஃப்ரெண்ட்லியானவர். ஆனால் சிம்பு நிறையவே நல்லவர். அவர் எப்போதும் கூலாக இருப்பார். சிங்கிள் டேக் ஆக்டர். ஒத்திகை செய்யும் போதும் என்னால் கேமராவை இயக்க முடியும். ஏனெனில் அங்கும், அவர் தனது 100% கொடுப்பார். அவருடன் வேலை செய்யும் போது சில மந்திரங்கள் நடக்கும். கமல் சாரை இயக்குவது எனக்கு வெகுமதியளிக்கும். காகிதத்தில் எழுதியதை விட 10 மடங்கு சிறப்பான பலனை தருவார். அஜித் தொழில்முறையில் முழுமையான நடிகர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”