‘ஆபத்தான நிலையை எட்டிய டெல்லி; ராணுவத்தை அனுப்புங்கள்’ – முதல்வர் கேஜ்ரிவால்

இராணுவத்தை வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும். இது குறித்து நான் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்

By: Published: February 26, 2020, 2:29:02 PM

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு சி.ஏ.ஏ. எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும், சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புமாறு உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஷாகீன் பாக் போராட்டம் – சமரச குழு அறிக்கையில் சமரசம் அடைந்ததா சுப்ரீம் கோர்ட்?

“நிலைமை ஆபத்தான சூழலை எட்டியுள்ளது. காவல்துறையின் அனைத்து முயற்சிகளையும் மீறி, நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நம்பிக்கையை வளர்க்கவும் முடியவில்லை. இராணுவத்தை வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும். இது குறித்து நான் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.


செவ்வாயன்று, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி ட்வீட் செய்ததாவது: “வன்முறை மற்றும் தீ விபத்து 48 மணி நேரமாக தொடர்கிறது. காவல்துறை, பொதுமக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் அதிக அளவில் காயமடைந்துள்ளனர். குறைந்தது 10 பேர் இறந்துள்ளனர். காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாவிட்டால், அமித் ஷா ஏன் ஊரடங்கு உத்தரவு விதிக்கவில்லை? இராணுவம் ஏன் அழைக்கப்படவில்லை?” என்று குறிப்பிடிருந்தார்.

கலவர பூமியான டெல்லி : நெஞ்சை பதற வைக்கும் படங்கள்

டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள், அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் 35 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Delhi violence kejriwal seeks indian army amit shah

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X