Advertisment

ஷாகீன் பாக் போராட்டம் - சமரச குழு அறிக்கையில் சமரசம் அடைந்ததா சுப்ரீம் கோர்ட்?

சாதனா ராமச்சந்திரன், திங்களன்று நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் கே எம் ஜோசப் ஆகியோரின் பெஞ்ச் முன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shaheen Bagh protest postponed, coronavirus

Shaheen Bagh protest postponed, coronavirus

ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய சமாதான குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு, ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.

Advertisment

சாதனா ராமச்சந்திரன், திங்களன்று நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் கே எம் ஜோசப் ஆகியோரின் பெஞ்ச் முன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கையை கவனத்தில் கொண்டு, பெஞ்ச் அதை கவனிப்பதாகவும், பிப்ரவரி 26 அன்று இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கலவர பூமியான டெல்லி : நெஞ்சை பதற வைக்கும் படங்கள்

சமாதான குழுவினர் தினம் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்தும், அவர்களது கோரிக்கை குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டு அறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒரு முடிவுக்கு வரும்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை அமர்வு பரிசீலிக்க வேண்டும். இந்த வாய்ப்பை வழங்கிய அமர்வுக்கு ராமச்சந்திரன் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார், இது ஒரு “கற்றல் அனுபவம்” என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை அமர்வால் பதிவு செய்யப்படவில்லை. எந்தவொரு வழக்கறிஞருக்கும் கிடைக்கவில்லை. ஒரு மனுதாரர் அறிக்கையின் நகலைக் கோரியபோது, ​​பெஞ்ச் அதை தற்போதைக்கு ரகசியமாக வைத்திருப்பதாகக் கூறியது, ஏனெனில் “ஒரு சமாதான குழுவின் நோக்கம் வேறுபட்டது. அவர்களின் அறிக்கை எங்கள் பதிவுக்கு மட்டுமே" என்று குறிப்பிட்டது.

கடந்த வாரம், முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா, CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் அமர்ந்திருக்கும் சாலையில் இருந்து "வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கான" எந்தவொரு முயற்சியும் "அவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யும்" என்றார்.

”கலவரத்தால் பிரிந்தோம்... துயரத்தால் இணைந்தோம்” - டெல்லியில் உறவினர்களை இழந்த குடும்பத்தினர்

சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது, கடந்த 60 நாட்களாக இந்த போராட்டத்தைப் பெண்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும், போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்தது.

இந்நிலையில், ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, சமரச குழுவின் அறிக்கையில் நிறைய இடங்களில் "ஒருவேளை" , "ஆனால்" போன்றவை இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை மார்ச் 23க்கு ஒத்தி வைத்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்-ல் பெற t.me/ietamil "

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment