Ivanka Trump's ivory gown : இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா ட்ரம்புக்கு நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
தன்னுடைய கணவர் ஜரேட் குஷ்னெருடன் ஜனாதிபதி மாளிகைக்கு வந்த இவான்கா ட்ரெம் (AP Photo/Alex Brandon, Pool)
Ivanka Trump's ivory gown
இவர்களுடன் அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த ஆலோசகரும், டொனால்டின் மருமகனுமான ஜரேட் குஷ்னெர் தன்னுடைய மனைவி இவன்கா ட்ரம்புடன் இந்தியா வந்திருக்கிறார். டொன்லாட் ட்ரம்பின் மகள் மற்றும் உதவியாளரான இவன்காவின் ஆடைத்தேர்வு என்றுமே அழகு, எளிமை மற்றும் பார்ப்பவர்கள் மனதை கொள்ளையிடும் வண்ணமாகவே இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். நேற்றைய (25/02/2020) இரவு, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இரவு விழாவில் கலந்து கொண்ட இவான்கா வெள்ளை நிறத்தில், அனார்கலி ஆடையை போன்றே உருவாக்கபட்ட ஆடையை அணிந்திருந்தார்.
ராஷ்ட்ரபதிபவனில் இவான்கா மற்றும் அவருடைய கணவர் (AP Photo/Alex Brandon, Pool)
இந்த ஆடையை ரோஹித் பால் வடிவமைத்திருக்கிறார். பந்த்காலாவில் இடம் பெற்றிருந்த இந்த ஆடையில் பூக்கள் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சிவப்பு மற்றும் தங்க நிற சரிகை வேலையுடன் இந்த ஆடை பார்ப்பவரின் மனம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அழகான உடையுடன் ஒய்யார நடை வந்த இவான்காவின் புகைப்படங்கள் இங்கே... உங்களுக்காக
இவான்கா, ஜெரேட் தம்பதியினரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்ற போது (AP Photo/Alex Brandon, Pool)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
இவான்கா, ஜெரேட் தம்பதியினரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்ற போது... அருகில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் (AP Photo/Alex Brandon, Pool)
ரோஹித் பால் உருவாக்கிய ஆடையை அணிந்து நடந்து வரும் மாடல்... இந்த உடையைத் தான் இவான்கா ட்ரம்ப் அணிந்திருந்தார். இந்திய சுதந்திரத்தை உணர்த்தும் துணி வகையான காதியில் இந்த ஆடை தைக்கப்பட்டது.
கண்ணைக் கவரும் இவான்கா ட்ரம்பின் உடைகள்
பிப்ரவரி மாதம் 25ம் தேதி 2020 ஆண்டு, இந்திய ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபரின் வருகைக்காக இவான்கா ட்ரம்ப் காத்துக் கொண்டிருந்த போது . (AP Photo/Alex Brandon)
25ம் தேதி காலை மிகவும் எளிமையான செர்வானி ஒன்றினை அணிந்து வந்தார் இவான்கா ட்ரம்ப். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் இந்த ஆடைக்கான பட்டுத்துணி கைத்தறியில் நெய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த ஆடையை அனிதா டோங்க்ரே தைத்துள்ளார். இந்த ஆடையின் விலை ரூ. 82, 400 ஆகும்.
அமெரிக்காவில் இருந்து நேரடியாக அகமதாபாத் வந்த அன்று (24/02/2020) இவன்கா பவுடர் நீல நிறத்தில் சிவப்பு நிற பூக்கள் வடிவமைப்புடன் கூடிய ஆடையை அணிந்திருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அர்ஜெண்டினா சென்ற போதும் இதே ஆடையை அவர் அணிந்திருந்தார்.
புதுடெல்லியில் இருக்கும் ரூஸ்வெல்ட் பகுதியில் இந்திய அமெரிக்க தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற போது (AP Photo/Alex Brandon)
அதிபர் மகளாக இருப்பினும் ஏற்கனவே உடுத்திய ஆடையை மீண்டும் உடுத்துவதில் என்ன தவறு என்று தான் இருந்தது அந்த பொறுப்பான பேஷன் ஸ்டேட்மெண்ட்.
மேலும் படிக்க : அதிபரின் மகளாகவே இருந்தாலும்… பழைய உடையை மறுபடியும் உடுத்துவதில் என்ன தவறு?