அதிபரின் மகளாகவே இருந்தாலும்… பழைய உடையை மறுபடியும் உடுத்துவதில் என்ன தவறு?

இவன்கா ட்ரெம்பின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட் பற்றி உங்களின் கருத்துகள் என்ன?

By: Updated: February 25, 2020, 12:34:38 PM

Ivanka Trump gives sustainable fashion goals  : இவன்கா ட்ரம்பின் ஆடை தேர்வுகளுக்காகவே அவர்களை பலரும் ஃபாலோ செய்து கொண்டிருக்கின்றனர். மிகவும் எளிமையான உடைகளில் வலம் வரும் அவர் ஒரு ஃபேஷன் ஐகானாக இருப்பதோடு மட்டுமின்றி மிகவும் பொறுப்பான இன்ஃப்ளூயென்சராகவும் இருக்கின்றார் என்று தான் கூற வேண்டும்.

Ivanka Trump gives sustainable fashion goals வெள்ளை மாளிகை மூத்த அலோசகர் இவான்கா ட்ரம்பினை அதிபர் ட்ரம்ப் வரவேற்கும் காட்சி

இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருகை புரிந்திருக்கும் இவன்கா ட்ரம்ப் நேற்று காலை தன்னுடைய தந்தை ட்ரம்ப் மற்றும் முதன்மை பெண்மணி மெலனியாவுடன் அகமதாபாத்தை வந்தடைந்தார். அழகான, இளநீல நிறத்தில் சிவப்பு நிற பூக்களால் ஆன ஆடையை அவர் அணிந்திருந்தார். கழுத்தில் டை-அப்புடன் இருக்கும் இந்த ஆடை வசந்த காலத்தினை நினைவு கூறுவது போன்று அவ்வளவு சிறப்பாக இருந்தது.

Ivanka Trump gives sustainable fashion goals, இவான்கா ட்ரம்ப்

இந்த ஆடை இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஏன் என்றால் இந்த உடையை இவர் பல்வேறு நிகழ்வுகளில் அணிந்திருக்கின்றார். ஒரு அதிபரின் மகள் நினைத்தால் நாள் ஒன்றுக்கு எத்தனையோ ஆடைகள் அணிய இயலும். ஆனாலும் நம்மைப் போன்று பழைய ஆடையையே “Recycle” செய்து அணிகின்றார் என்று பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.  இந்த ஆடையை கடந்த ஆண்டு அர்ஜெண்டினா சென்றிருந்த போதும் இவன்கா அணிந்திருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த முத்து கம்மல் மட்டும் தான் இம்முறை மிஸ்ஸிங்.

மேலும் படிக்க : ஸ்பெஷலாக தயாரான மெலனியா டிரம்ப் ஆடை; கவனிக்க வைத்த இந்திய டச்

 

View this post on Instagram

 

???????? Thank you Argentina! #WGDP ????????

A post shared by Ivanka Trump (@ivankatrump) on

இவன்காவின் இந்த ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் பற்றிய உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு உங்களின் கருத்துகள் மூலம் தெரிவிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ivanka trump gives sustainable fashion goals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X