/tamil-ie/media/media_files/uploads/2020/06/Tamil-Cinema-News-Gayathrie-Shankar-Childhood-Picture.jpg)
Tamil Cinema News, Gayathrie Shankar Childhood Picture
Gayathrie Shankar: '18 வயசு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, விஜய் சேதுபதியின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர். இதனைத் தொடர்ந்து 'ரம்மி', 'புரியாத புதிர்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த வருடம் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் திருநங்கையின் மனைவியாக நடித்திருந்தார்.
’ரஜினி அங்கிள் ரெஸ்ட் எடுத்துக்க சொல்வாரு’: ’ராஜா சின்ன ரோஜா’ ராகவி
,
View this post on InstagramA post shared by Gayathrie (@gayathrieshankar) on
தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் காயத்ரி. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இசையமைத்துள்ளார். இசை ராஜாக்கள் மூவரும் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சருமம் பிரைட் ஆக வேண்டுமா? இருக்கவே இருக்கு கோதுமை மாவு, ஆட்டா
இந்நிலையில் தன்னுடைய சின்ன வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காயத்ரி ஷங்கர். இந்தப் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் காயத்ரி மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.