Gitanjali Selvaraghavan: தமிழில் பல மகத்தான படங்களை இயக்கிய இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாட்டால், அவர்களுக்கு விவாகரத்தானது. அதன் பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
’அப்பா ஆசையை நிறைவேத்தணும்’: லட்சியத்தை நோக்கி அஷ்ரிதா ஸ்ரீதாஸ்!
கீதாஞ்சலி செல்வராகவனின் லேட்டஸ்ட் படம்.
இந்தத் தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையே சமீபத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவரிடம், ‘நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு சிலர் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
’பிறந்தநாள் பரிசா அம்மா வேணும்ப்பா’: நிறைவேறுமா கயலின் ஆசை?
இந்நிலையில் தற்போது, கீதாஞ்சலி செல்வராகவன் தான் மூன்றாவது முறை கர்ப்பமடைந்திருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், ஒரு அழகான படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் கீதாஞ்சலி தனது கர்ப்ப வயிற்றை காட்டியவாறு, கண்களை அகலமாக ஆச்சரியத்துடன் விழித்து "17 வாரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போது செல்வராகவன் ரசிகர்கள் அவருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”