/tamil-ie/media/media_files/uploads/2020/06/Godman-Web-Series-Daniel-Balaji-Jayaprakash-Sonia-Agarwal.jpg)
Godman Web Series, Daniel Balaji, Jayaprakash, Sonia Agarwal
Godman Web Series: ஜீ-5 ஓ.டி.டி தளத்தில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “காட்மேன்” என்ற வெப் சிரீஸ் வெளியாக உள்ளது. ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப் சிரீஸின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்த இணைய தொடரின் டீசரில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களால் அமெரிக்க வெள்ளை மாளிகை முற்றுகை – பதுங்கிய டிரம்ப்
வெளிப்படையான பாலியல் காட்சிகள், மதம் மற்றும் கடவுளை முக்கியமானதாக வைத்து இந்த வெப் சிரீஸ் இயக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குட்டி திருடனாக நடித்துள்ளார். அப்போது கடவுளாக நடிக்கும் ஜெயபிரகாஷ், உண்மையான பிராமணராக எப்படி மாற வேண்டும் என்று பாலாஜிக்கு கற்றுக்கொடுக்கும் விதமாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
’வாத்தி கம்மிங் ஒத்து கொரோனா’ ஆர்த்தி கணேஷ்!
இதற்கு இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக தமிழக தலைவர் முருகன் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் இந்த தொடரை வெளியிட அனுமதிக்க கூடாது என்று கூறினர். இந்நிலையில், சென்னை மத்திய காவல்துறை 'காட்மேன்' தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் சோனியா அகர்வாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, டேனியல் பாலாஜி சமூக வலைதள பயனர்களிடம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளார். அவர் ஒரு இந்து என்றாலும், கிறிஸ்தவர் என்ற அனுமானத்தின் கீழ் அவர் மீது தங்களது கோபத்தைக் காட்டி வருகிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.