New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/06/Hansika-Motwani-Marriage-Rumors.jpg)
Hansika Motwani Marriage Rumors
"அராஜகம்.. அடக்கடவுளே.. யார் அவர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹன்சிகா.
Hansika Motwani Marriage Rumors
Hansika Motwani : தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜமீல் இயக்கத்தில் உருவாகும் 'மஹா' படத்தில் நடித்து வருகிறார்.
லடாக்கில் மட்டுமல்ல, மூன்று துறைகளிலும் சீனா கடந்த மாதம் ட்ரூப்களை நகர்த்தியது
அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Breakingnews: heroine #hansika going to marry a businessman in a couple of days @ihansika pic.twitter.com/YK5yk7jPHq
— Filmybullet (@filmybullet) June 10, 2020
இதனிடையே அவ்வப்போது ஹன்சிகாவுக்கு திருமணம் என வதந்தி பரவுவது வழக்கம். அதே போல் இந்த முறையும் செய்திகள் பரவின. இந்நிலையில் திருமண வதந்தி பரப்பியவருக்கு ட்விட்டரில் பதிலடிக் கொடுத்துள்ளார் ஹன்சிகா. அவரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "இன்னும் இரண்டு நாட்களில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் ஹன்சிகா" என்று செய்திகள் வரிசைக் கட்டின. அதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் "அராஜகம்.. அடக்கடவுளே.. யார் அவர்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹன்சிகா.
மொட்டை தலையில் முத்தம்: புதிய நண்பருடன் அமலா பால்!
இந்தப் பதிவுக்கு ஹன்சிகாவின் நண்பர் என்னிடம் கூடச் சொல்லவில்லையே என்று கிண்டலாகக் கேட்க, அதற்கு "ஏனென்றால் எனக்கும் இப்போதுதான் தெரிய வந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.