மாப்பிள்ளை வீட்டாரின் ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் ரூ5 லட்சம்: ஹன்சிகா திருமணத்தில் அம்மா கறார்

ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், மோனா மோத்வானி, சோஹேலின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்ததாக கூறப்பட்டுள்ளது

hansika marriage
ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா டிசம்பர் 2022 இல் திருமணம் செய்து கொண்டனர். (புகைப்படம்: ஹன்சிகா/ இன்ஸ்டாகிராம்)

நடிகை ஹன்சிகா மோத்வானி, தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை 2022 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, மெஹந்தி போலோ, சங்கீத் மற்றும் ஹல்டி உள்ளிட்ட திருமணத்திற்கு முந்தைய விழாக்களை நடத்தியது.

சடங்கு நிகழ்வுகள் தடையின்றி நடந்தன, ஆனால் ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானிக்கு ஒரு பிரச்சினை இருந்தது. நிகழ்வுகளுக்கு தாமதமாக வந்ததற்காக சோஹேலின் குடும்பத்தினருடன் மோனா வருத்தப்பட்டதாகத் தோன்றியது. ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், மோனா மோத்வானி, சோஹேலின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சண்டை போட்ட வனிதா- ரவீந்தர் எப்போ சேர்ந்தாங்க?

மோனா, “எனக்கு ஒரு பணிவான வேண்டுகோள் உள்ளது. கதுரியாக்கள் மிகவும் தாமதமாக வருபவர்கள், ஆனால் மோத்வானிகள் நேரத்தை சரியாக கடைபிடிப்பவர்கள். இன்று தாமதமாக வந்தால், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அசுபமான நேரம் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை இருப்பதால் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். எனவே நீங்கள் சற்று முன்னதாக வர முடியுமா என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.

ஹன்சிகா மண்டபத்தில் சோஹேலைக் கண்டதும் உணர்ந்த உணர்ச்சிகளை விவரித்தார். “இது கனவாக, நம்ப முடியாததாக இருந்தது. அது என்னை மிகவும் பாதித்தது, ‘என் வாழ்க்கையில் நான் காதலிக்கும் ஒருவரை நான் திருமணம் செய்துகொள்கிறேன்.’ என்று தோன்றியது, அது சிறந்த உணர்வு. விஷயங்கள் உண்மையாகின்றன. நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன். அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. அது மிகவும் வித்தியாசமான ஒன்று மற்றும் நான் உடைந்துவிட்டேன்,” என்று ஹன்சிகா கூறினார்.

நவம்பர் 2022 இல், ஹன்சிகா சோஹேலுடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்து, “இப்போது&எப்போதும்” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார். ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Hansika motwanis mother demands rs 5 lakhs for every minute the ladkewale were late kathurias are always late

Exit mobile version