ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்த ஸ்டார் குழந்தை : அனோஷ்கா அஜித் பிறந்தநாள்!

அம்மா ஷாலினியை போல் பேட்மிண்டனிலும் ஆர்வம் மிகுந்தவர் அனோஷ்கா. தகுந்த பயிற்சியைப் பெற்று போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.  

#HBDAnoushkaAjith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித் தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார். நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

TN local body election live : மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

அஜித் மீது அளவுக் கடந்த அன்பு வைத்திருக்கும் அவரது ரசிகர்கள், அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஃபோட்டோக்களையும், பிறந்தநாளையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். அஜித்தின் மகன் ஆத்விக்கை குட்டி தல என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அனோஷ்காவை மட்டும் என்ன சும்மாவா விடுவார்கள்.

#HBDAnoushkaAjith என்ற ஹேஷ் டேக்கில் அனோஷ்காவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

2008-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பிறந்த அனோஷ்கா, அப்போதிலிருந்தே ’ஃபேவரிட் ஸ்டார் கிட்’ ஆனார். காரணம் எந்த விழாக்களுக்கும், மிக அழகாக உடையணிவித்து அனோஷ்காவை கூட்டி வருவார்கள் அஜித் – ஷாலினி தம்பதிகள். குறிப்பாக குழந்தையிலேயே சாரி – ஹாஃப் சாரி அணிந்து பிரபலமானார் அனோஷ்கா. சமையல், புகைப்படக்கலை, கார் ரேஸிங், துப்பாக்கி சுடுதல் என பலவகைத் திறமைகளைக் கொண்டவர் அஜித். அதுபோல் அவரது மகள் அனோஷ்கா பாடல், நடனம், விளையாட்டு போன்றவற்றில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

கரகாட்டம், பரத நாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ் என பலவகை நடனங்களில் கவனம் செலுத்தி வரும் அனோஷ்கா, நல்ல குரல் வளம் மிகுந்தவர். சில நாட்களுக்கு முன்பு அவரது பள்ளியின் கிறிஸ்துமஸ் விழாவில் அனோஷ்கா பாடியா பாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது. அனோஷ்கா அஜித்தின் படத்தில் பாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம். தவிர, அம்மா ஷாலினியை போல் பேட்மிண்டனிலும் ஆர்வம் மிகுந்தவர் அனோஷ்கா. தகுந்த பயிற்சியைப் பெற்று போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் அனோஷ்காவுக்கு மிகவும் பிடித்திருந்ததாம். அதனால் இனி தனது படங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் இடம்பெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென அப்போதே முடிவு செய்து விட்டாராம்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close