TN local body election : மா.கவுன்சில் தேர்தலில் 40 சதவீதம் வெற்றியை தாண்டிய திமுக: அதிமுக பின்னடைவு

Local body election Tamil, Latest News : மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் சதவீதம் வாரியாக (மொத்த எண்ணிக்கை : 515 ) திமுக 42.14, அதிமுக 36.31 பெற்றுள்ளன. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுக கட்சிக்கு பின்னடைவாகவே கருதபடுகிறது.

Local body election news

Local body election updates : தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் சதவீதம் வாரியாக (மொத்த எண்ணிக்கை : 515 ) திமுக 42.14, அதிமுக 36.31 பெற்றுள்ளன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (மொத்த எண்ணிக்கை : 5090 ) சதவீதம் வாரியாக திமுக 39.31, அதிமுக 32.77 சதவீதம் பெற்றுள்ளன.

 

11 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு… எந்தெந்த மாவட்டங்களில் யார் முன்னிலை?

வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி?

 

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் அ.தி.மு.க.2,136 இடங்களிலும் தி.மு.க. 2,356  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன . மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவிகளில், திமுக 247  இடங்களிலும் அதிமுக 213  இடங்களிலும் முன்னிலை வகித்தன.

ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் ஒன்றிய வார்டுகளிலும் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர் தலைவர் மற்றும் துணைத் தலைவராக முடியும். எனவே மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழுத் தலைவர், துணை தலைவர் பதவிகளை எந்த கட்சி கைப்பற்றப் போகிறது என்பது இன்று மாலை தெரியவரும்.

Live Blog

Local body election in Tamil, Latest News in Local body election Live Updates : ஊரக உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருவதால் இன்று மாலைக்குள் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19:54 (IST)03 Jan 2020
லேட்டஸ் வெற்றி நிலவரம்: மாவட்ட கவுன்சிலில் அதிமுக - 213, திமுக - 247 வெற்றி

உள்ளாட்சி தேர்தல் மாவட்ட கவுன்சிலில் வெற்றி நிலவரம்: அதிமுக - 213பாமக - 16தேமுதிக - 4பாஜக -6அதிமுக கூட்டணி இதர - 1

திமுக - 247காங்கிரஸ் - 13மதிமுக - 2விசிக - 1இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 6இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 2திமுக கூட்டணி இதர - 3சுயேச்சை - 1

19:20 (IST)03 Jan 2020
லேட்டஸ் வெற்றி நிலவரம்: ஒன்றிய கவுன்சிலில் அதிமுக - 1,797, திமுக - 2,110

உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலில் வெற்றி நிலவரம்: அதிமுக - 1,797பாமக - 151தேமுதிக - 94பாஜக - 87அதிமுக கூட்டணி இதர - 7

திமுக - 2,110காங்கிரஸ் - 126மதிமுக - 16விசிக - 6இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 71இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 24திமுக கூட்டணி இதர - 3நாம் தமிழர் கட்சி - 1அமமுக - 95சுயேச்சை - 479

18:19 (IST)03 Jan 2020
லேட்டஸ்ட் நிலவரம்: மாவட்ட கவுன்சிலில் அதிமுக - 240, திமுக - 271

உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக - 240 இடங்களிலும் திமுக - 271 இடங்களிலும் முன்னிலை.

16:43 (IST)03 Jan 2020
லேட்டஸ்ட் நிலவரம்: ஒன்றிய கவுன்சிலர்கள் திமுக 2,333, அதிமுக - 2,184 முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தல் 3.45 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 5067 இடங்களுக்கு 5059 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. திமுக - 2,333, அதிமுக - 2184,நாம் தமிழர் அமமுக 95 இடங்கள் பிற கட்சிகள் 443 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

16:14 (IST)03 Jan 2020
இரண்டு வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாயாகுளம் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பஞ்சவள்ளி மற்றும் சரஸ்வதி போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இருவரும் 664 வாக்குகள் சமமாக பெற்றதால் குலுக்கல் முறையில் ஊராட்சி தலைவரை தேர்வு செய்தனர். இதில் சரஸ்வதி வெற்றி பெற்றார்.

15:28 (IST)03 Jan 2020
அரூர் அருகே சோரியம்பட்டியில் செல்லாத வாக்குகளை எண்ணக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்

சேலம் மாவட்டம், அரூர் அடுத்த சோரியம்பட்டியில், செல்லாத வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மரங்களை வெட்டி போட்டு, கற்களை வைத்து, சாலையின் குறுக்கே கயிறு கட்டி பொதுமக்கள் மறியல்.

அரசியல் தலையீடு காரணமாக, தேர்தல் முடிவுகள் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டு.

15:07 (IST)03 Jan 2020
எடப்பாடியின் அனைத்து வார்டுகளிலும் அதிமுக வெற்றி

முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியின் அனைத்து வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

15:01 (IST)03 Jan 2020
திமுக கூட்டணி அமோக வெற்றி – ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை, எதிர்மறைக்கூறுகளை மீறி திமுக கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

14:52 (IST)03 Jan 2020
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு “தெறி” வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி  2011-ம் ஆண்டைவிட  அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகளின் கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட பாஜக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் 29 இடங்களையும் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இம்முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக. தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முடிவுகளின்படி, பா.ஜ.,  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில்  48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

13:46 (IST)03 Jan 2020
திமுக வெற்றி பெறவில்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை ; மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

13:24 (IST)03 Jan 2020
அதிமுகவுக்கு பின்னடைவு ஏன்? – அன்வர் ராஜா பதில்

அதிமுக, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தான், இந்த உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள், அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. இதன்காரணமாக, இந்த பின்னடைவு என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.அதிமுக, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் போட்டியிட்ட இவரது வாரிசுகள், உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

12:34 (IST)03 Jan 2020
தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் மத்திய அரசு அலுவலர்கள் 6 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

12:23 (IST)03 Jan 2020
திமுக – 1650, அதிமுக – 1344 இடங்களில் வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில், மொத்தமுள்ள 5090 இடங்களில், 3845 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 1650  இடங்களிலும், அதிமுக 1344,  பாரதிய ஜனதா 52, சிபிஐ - 59, சிபிஐ (எம்) - 24, தேமுதிக - 86, காங்கிரஸ் - 93, தேசியவாத காங்கிரஸ் - 1, மற்றவை 600  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

11:53 (IST)03 Jan 2020
திமுக – 267, அதிமுக – 237 இடங்களில் முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், திமுக 267 இடங்கள், அதிமுக 237 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

11:25 (IST)03 Jan 2020
திமுக – 2,266, அதிமுக – 2,110, அமமுக 90 இடங்களில் முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், திமுக – 2,266, அதிமுக – 2,110, அமமுக 90, நாம் தமிழர் 1  இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

11:13 (IST)03 Jan 2020
ஒரு தலைவர் பதவிக்கு, இரண்டுபேர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட வினோதம்

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர்.  இதில் தேவி 318 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது அருகே நின்றிருந்த மற்றொரு வேட்பாளரான பிரியதர்ஷினி, தேவிக்கு வழங்கப்பட்ட சான்றிதழை பறித்து கிழிக்க முயன்றார். மேலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பிரியதர்ஷினி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.   இதையடுத்து மீண்டும் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில், பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருவருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. 

10:54 (IST)03 Jan 2020
திமுக தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மொத்தமுள்ள 515 இடங்களில், 207  இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 109  இடங்களிலும், அதிமுக 74 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில், மொத்தமுள்ள 5090 இடங்களில், 3845 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 1629  இடங்களிலும், அதிமுக 1324  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

10:48 (IST)03 Jan 2020
21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. எஞ்சிய 6 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையவில்லை.

10:44 (IST)03 Jan 2020
வெற்றி பெற்ற வேட்பாளர் மரணம் - பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூர் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் உடல் நலக்குறைவால்  மரணமடைந்தார்.  வெற்றிச் சான்றிதழை பெற்றுச் சென்ற நிலையில் அவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

10:24 (IST)03 Jan 2020
மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி பகுதியில், திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையும், வெற்றியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10:15 (IST)03 Jan 2020
ஒன்றிய கவுன்சிலர் – திமுக 2131 ; அதிமுக 1946 இடங்களில் முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 5067 இடங்களில், 4548 இடங்களின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் திமுக 2131 இடங்களிலும், அதிமுக 1946 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

09:47 (IST)03 Jan 2020
திமுக 234 ; அதிமுக 213 இடங்களில் முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மொத்தமுள்ள 515 இடங்களில் திமுக 234 இடங்களிலும், அதிமுக 213 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

09:34 (IST)03 Jan 2020
10 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு

கிராமப்புற ஊராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேனி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது.

09:02 (IST)03 Jan 2020
திமுக அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மொத்தமுள்ள 515 இடங்களில், 188 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 97 இடங்களிலும், அதிமுக 70 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில், மொத்தமுள்ள 5090 இடங்களில், 3689 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக 1561 இடங்களிலும், அதிமுக 1271 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

08:44 (IST)03 Jan 2020
ஆறுகுட்டி எம்எல்ஏ மகள் வெற்றி

கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியின் மகள் அபிநயா வெற்றி பெற்றுள்ளார்.

08:03 (IST)03 Jan 2020
எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, எம்.பி. ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்

கரூரின் க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். க.பரமத்தியின் 16வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதால் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

08:00 (IST)03 Jan 2020
8 மணி நிலவரம்

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் திமுக 244 இடங்களிலும் அதிமுக 225 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களுக்கான போட்டியில் திமுக 1981 இடங்களிலும், அதிமுக கூட்டணி 1800 இடங்களிலும், அமமுக 66 இடங்களிலும் நாம் தமிழர் ஒரு இடத்திலும் பிற கட்சியினர் 398 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

07:34 (IST)03 Jan 2020
ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்

அதிமுக 1735 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 2021 இடங்களிலும் மற்ற கட்சிகள் மொத்தமாக 326 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

07:34 (IST)03 Jan 2020
காலை 7 மணி முன்னிலை நிலவரம்

மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 190 இடங்களை அதிமுகவும், திமுக 191 இடங்களையும், இதர கட்சி ஒரு இடத்தினையும் கைப்பற்றியுள்ளது.

23:40 (IST)02 Jan 2020
ஜனநாயக படுகொலை - மு.க.ஸ்டாலின்

தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "பல்வேறு மாவட்டங்களிலும் எங்கள் தரப்பு வெற்றியை இதுவரை அறிவிக்காமல் இருக்கிறார்கள். எனவே தான் மீண்டும் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்திருக்கிறோம். இதுவரை 30 சதவிகித தேர்தல் முடிவுகளே வெளி வந்திருக்கிறது. இன்னும் 70 சதவிகித முடிவுகள் வருவதற்குள் என்னென்ன நடக்கப் போகிறதோ. இங்கு ஜனநாயக படுகொலை நடக்கிறது. நாங்கள் இதுவரை கொடுத்த எந்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

23:23 (IST)02 Jan 2020
தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின்

தேர்தல் ஆணையரிடம் நேரில் புகாரளிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். துரைமுருகன் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்துள்ளனர்.

23:19 (IST)02 Jan 2020
தர்ணாவில் ஈடுபடுகிறாரா ஸ்டாலின்?

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக மீண்டும் புகாரளிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையர் அலுவலத்திற்கு வருகிறார். ஒருவேளை அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை எனில் அங்கே தர்ணாவில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

23:00 (IST)02 Jan 2020
அறிக்கையாக அளிக்க உத்தரவு

வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதிமொழியை மாநில தேர்தல் ஆணையம் அறிக்கையாக அளிக்க வேண்டும்

- உயர்நீதிமன்றம்

வெற்றி அறிவிப்பில் தாமதம் எனக்கூறி திமுக தாக்கல் செய்த மனு மீது நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு

22:15 (IST)02 Jan 2020
19 இடங்களில் பாஜக வெற்றி

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில்,  எதிர்பார்த்ததை விட சற்று அதிக இடங்களில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 19 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

22:10 (IST)02 Jan 2020
இரண்டு மனைவிகளும் வெற்றி

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் இரண்டு மனைவிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர்.

22:00 (IST)02 Jan 2020
10 மணி நிலவரம் - திமுக ஆதிக்கம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில்  492 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. 389 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இதுவரை மொத்தம் 6 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் அதிமுக வென்றுள்ளது.  சிபிஐ ஒரு இடத்தில் வென்றுள்ளது.

21:47 (IST)02 Jan 2020
10 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி

கிருஷ்ணகிரி: 14-வது வார்டில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், 5மணி நேரத்திற்கு பிறகு மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு

21:38 (IST)02 Jan 2020
அதிக இடங்களில் திமுக வெற்றி

இரவு 9.30 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில்  443 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. 356 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது.

வெற்றி விவரம் குறித்த முழு தகவல்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

21:18 (IST)02 Jan 2020
மாவட்ட கவுன்சிலர் தேர்தல் - திமுக ஆதிக்கம்

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இதுவரை மூன்று இடங்களுக்கு மட்டுமே இறுதியான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று இடங்களிலும் திமுகவே வென்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கடலூர் 7வது வார்டில் ரா.நிர்மலா வெற்றிப் பெற்றுள்ளார்.

திருவாரூர் - 6வது வார்டில் திமுகவின் ஆர்.கலியபெருமாள் வெற்றி

நீலகிரி  - 4வது வார்டில் ரா.வனஜா வெற்றி

21:01 (IST)02 Jan 2020
முதல் வெற்றியை பதித்த நாம் தமிழர்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார்.

20:47 (IST)02 Jan 2020
மு.க.ஸ்டாலின் வீண்பழி சுமத்துகிறார்

மாநில தேர்தல் ஆணையம் மீது மு.க.ஸ்டாலின் வீண்பழி சுமத்துகிறார் என அதிமுகவின் பொன்னையன் தெரிவித்துள்ளார், 

முன்னதாக, திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி

சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.

20:44 (IST)02 Jan 2020
மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் முதல் வெற்றி

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் எந்த கட்சியும் வெற்றியை பதிவு செய்யாத நிலையில், நீலகிரி நான்காவது வார்டில் திமுக வேட்பாளர் ரா.வனஜா வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக இதுவரை எந்த இடத்திலும் அதிகாரப்பூர்வமாக வெல்லவில்லை.

20:37 (IST)02 Jan 2020
இயக்குனர் பா.ரஞ்சித்தின் சகோதரர் வெற்றி

வில்லிவாக்கம் ஒன்றிய 1வது வார்டு கவுன்சிலராக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு வெற்றி

20:15 (IST)02 Jan 2020
10 வாக்குகள் மட்டும் பெற்று வெற்றி

10 வாக்குகள் மட்டுமே பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவரானார்.

திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற இராஜேஸ்வரி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு.

மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகளை இராஜேஸ்வரி பெற்றதால் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு.

20:08 (IST)02 Jan 2020
Tamil Nadu Local Election Results Updates: இரவு 8 மணி நிலவரப்படி....

இரவு 8 மணி நிலவரப்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், திமுக கூட்டணி 162 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 134 இடங்களில் முன்னிலையில், மற்ற எந்த கட்சியும் வேறு தொகுதிகளில் முன்னிலையில் இல்லை. 

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், திமுக கூட்டணி 1177 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 967 இடங்களிலும், மற்றவை 82 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

19:59 (IST)02 Jan 2020
TN Local Body Election Live: திமுக 7 இடங்களில் வெற்றி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக 7 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி.

19:51 (IST)02 Jan 2020
முடிவு எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய 4 வது வார்டு எண்ணிக்கை

பால்தங்கம்(பாஜக) - ஜெனிட்டா(காங்.)தலா 1251 ஓட்டுகள்

முடிவு எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த அதிமுக பிரமுகர் - திமுக எதிர்ப்பு

19:38 (IST)02 Jan 2020
போலீஸ் தடியடி

மதுரை: திருமங்கலத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

19:28 (IST)02 Jan 2020
மயங்கி சாய்ந்த திமுக முகவர்

ஸ்ரீவில்லிபுத்தூர் வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கி சாய்ந்த திமுக முகவர் செல்லப்பாண்டி. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

19:26 (IST)02 Jan 2020
வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக போராட்டம்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுக போராட்டம் நடத்தியது. தேர்தல் அதிகாரிக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பினர். திமுகவின் ரஞ்சிதம் வெற்றிபெற்றதாக தெரிவித்த நிலையில், திடீரென அதிமுகவின் சரோஜா வென்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Local body election : Local body election in Tamil, Latest News in Local body election Updates : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில், 14 வார்டுகள் உள்ளன. இதில், இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரியா, 30, தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். 27ம் தேதி தேர்தல் நடந்தது. நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன.ரியா, 2,701 ஓட்டுகளும், அ.தி.மு.க.., வேட்பாளர் கந்தம்மாள், 1,751 ஓட்டுகளும் பெற்றனர். 950 ஓட்டுகள் அதிகம் பெற்று, ரியா வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் வழங்கினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில், தமிழகத்தில் திருநங்கை வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.

திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வளர்மதியின் ஆதரவாளர், செல்வம். இவரது மனைவி அமுதா. அண்மையில் அமுதாவுக்கு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.இந்நிலையில், மணிகண்டம் யூனியன் சேர்மன் பதவிக்கு, அமுதா, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். இவருக்கு, 'சீட்' கொடுத்ததால், அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் அமுதா, தி.மு.க., வேட்பாளரிடம், 300க்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதை, அ.தி.மு.க.,வினரே கொண்டாடி மகிழ்ந்தனர்.

Web Title:

Local body election live updates local body election in tamil nadu 2019 tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close