Ilayaraja: கடந்த 45 வருடங்களாக தமிழ் சமூகத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் தனது இசை மந்திரத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. தமிழகத்தின் பாரம்பரிய இசையை, கடல் கடந்து சிறப்புற செய்ததில் இளையராஜாவின் பங்கு மிக அதிகம். அதிலும் குறிப்பாக, இசை என்பது குறிப்பிட்ட சாரார் மட்டுமே கேட்கவும், ரசிக்கவும் முடியும் என்று இருந்த காலகட்டத்தில், சாமானியனையும் ரசிக்க செய்தவர் ராஜா மட்டுமே.
Wishing the legends of Tamil Cinema a very happy bday!???????? #HBDIlaiyaraaja #HappyBirthdayManiRatnam pic.twitter.com/cHi6bE5fzt
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) June 2, 2020
ஆறுதல் செய்தி… சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை
வயலில் வேலை செய்பவர்கள், மூட்டை தூக்குபவர்கள், கல்லுடைப்பவர்கள் போன்ற பாமர மக்கள், தங்களது கஷ்டங்களை மறந்து இசையை ரசித்துக் கொண்டே, வேலை செய்தது ராஜாவின் இசையால் தான். இன்னும் குறிப்பாக, இரவு நேர செக்யூரிட்டிகளுக்கு, இப்போதும் ராஜாதான் செக்யூரிட்டி. 1976-ல் ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களை நிறைவு செய்து, இசை ரசிகனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். நாடக குழுவில் இசைக் கச்சேரிகளுக்கும், நாடகங்களுக்கும் பகுதிநேர வாத்தியக் கலைஞராக சலில் சௌத்ரியிடம் வேலை செய்து வந்த ராஜா, பின்னர் கன்னட இசையமைப்பாளரான ஜி.கே வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்தார்.
Happy birthday legends ❤️ #HBDIlaiyaraaja sir ???? #HappyBirthdayManiRatnam sir ????
— Master Mahendran ???? (@Actor_Mahendran) June 2, 2020
அவரது இசைக்குழுவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்த நேரத்தில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தின் போது, சுயமாக பாடல்களை எழுதி, தான் இருந்த இசைக் குழுவில் அங்கம் வகித்த கலைஞர்களை, அதற்கு இசை அமைக்கும் படி கேட்டுக் கொள்வாராம். பின்னர் தயாரிப்பாளர், பஞ்சு அருணாச்சலம் தனது படமான ’அன்னக்கிளியில்’ ராஜாவை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் மேற்கத்திய இசையோடு, தமிழ் மரபையும் புகுத்தி அவர் இசையமைத்த ’மச்சான பாத்தீங்களா’ பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Happy Birthday to our beloved RAJA sir. May God bless you with a long happy healthy and peaceful musical life. Enjoy your Birthday dear sir???? ????????????????#KSChithra #Isaignani #Maestro #Ilaiyaraaja #KrishnaDigiDesign #Audiotracs pic.twitter.com/7wGT4DidAi
— K S Chithra (@KSChithra) June 1, 2020
இதனைத்தொடர்ந்து, ’ஆறிலிருந்து அறுபது வரை’, ’16 வயதினிலே’, ’நூறாவது நாள்’, ’ஆனந்த்’, ’கடலோர கவிதைகள்’, ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ’ஆண்டாள் அடிமை’, ’ஆராதனை’, ’ஆத்மா’, ’ஆவாரம்பூ’, ’அபூர்வ சகோதரர்கள்’, ’அடுத்த வாரிசு’, ’மூன்றாம் பிறை’, ’பயணங்கள் முடிவதில்லை’, ’குங்குமச்சிமிழ்’, ’உதயகீதம்’, ’இதயகோயில்’, ’முள்ளும் மலரும்’, ’மௌன ராகம்’, ’முதல் மரியாதை’, ’அலைகள் ஓய்வதில்லை’, ’அம்மன் கோவில் கிழக்காலே’, ’குணா’, ’காக்கிச்சட்டை’, ’நாயகன்’, ’காதலுக்கு மரியாதை’ என அவர் இசையமைத்த படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படத்திலும் ஒருவித வித்தியாசத்தை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார் ராஜா.
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.#இசைஞானி #Isaignani @ilaiyaraajaoffl @ilaiyarajamusic #hbdilaiyaraja pic.twitter.com/uoBvQ6jvMt
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 2, 2020
வாட்ஸ் ஆப் பயனாளர்களே… உங்கள் தகவல்கள் திருடு போகும் வாய்ப்பு – கவனம்
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார். சிம்பொனி இசையமைப்பு, ’பஞ்சமுகி’ என்ற கர்நாடக ராகம் உருவாக்கம், இசை ரசிகர்களுக்கு புதிய பரிணாமத்தை அறிமுகம் செய்த, ’ஹவ் டு நேம் இட்’, ’கீதாஞ்சலி’ என்ற பக்தி இசைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் செய்துள்ளார். தனது இசைக்காக இந்திய அரசின் உயரிய விருதான, ’பத்ம விபூஷண்’ விருதையும், 5 முறை தேசிய விருதையும், தமிழக அரசின் ’கலைமாமணி’ விருதையும் பெற்றுள்ள இவர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழும் இசையும் போல என்றும் செழிப்புடன் வாழ இசைஞானி இளையராஜாவை வாழ்த்துவோம்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.