Advertisment

’ரசிகர்களை எனது கேடயமாக பயன்படுத்த மாட்டேன்’: தல அஜித்

பிறந்தநாளில் ரசிகர்கள் நிச்சயம் தங்கள் புகழ்பாட வேண்டும், என்பதே பெரும்பாலான நடிகர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thala Ajith Birthday, Happy Birthday Ajith, Twitter Trending

Thala Ajith Birthday, Happy Birthday Ajith, Twitter Trending

Happy Birthday Ajith: நடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு வருடமும் அஜித்தின் பிறந்தநாளின் போது அதை திருவிழாவாக கொண்டாடுவார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த வருடம் உலகமே கொரோனா வைரஸால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.  இந்த நேரத்தில், தான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, என முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அஜித். இருப்பினும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? ஒரு வாரத்திற்கு முன்பே, இணையத்தில் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

Advertisment

அஜித்தின் அந்த தைரியம்தான் ஜெயலலிதாவை கவர்ந்தது: ஒரு பாசப் பிணைப்பின் கதை

இந்த சமயத்தில் தனது 40-வது பிறந்த நாளின் போது, அஜித் எடுத்த முக்கிய முடிவு ஒன்று நமக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டில், அஜித் தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.  பிறந்தநாளுக்கு 2 நாள் முன்பாக, அவரிடமிருந்து முக்கிய அறிக்கை ஒன்று வெளியானது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அறிக்கையில், அதிர்ச்சியே காத்திருந்தது.

அந்த அறிக்கையில், ”நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை, கேடயமாக பயன்படுத்தியதுமில்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும், இல்லாவிட்டால் அதனை விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமையுண்டு. சமுதாய பணிகளில் ஈடுபடுவது கூட, யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும், என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்.

happy birthday thala ajith, ajith birthday அஜித் வெளியிட்ட அறிக்கை...

நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல்ல உள்ளமும் எண்ணமும் மட்டுமே போதும், என்பது என் கருத்து. அதனால் எனது 40-வது பிறந்த நாளில் என் கருத்தை முடிவாக அறிவிக்கிறேன். அதோடு என் தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த, அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். எனது இந்த முடிவுக்கு ஆதரவளிக்கும் உண்மையான ரசிகர்களின், கருத்து மட்டுமே எனது பிறந்தநாள் பரிசாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித்.

தொடர் தோல்விகள், துவண்டு போகவில்லை: ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்த அஜித்!

பொதுவாக ரசிகர்கள் எப்போதும் தங்களைப் பற்றி பேச வேண்டும், தங்களை தூக்கி கொண்டாட வேண்டும், குறிப்பாக பிறந்தநாளில் ரசிகர்கள் நிச்சயம் தங்கள் புகழ்பாட வேண்டும், என்பதே பெரும்பாலான நடிகர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும். அப்படியான முக்கிய சமயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்து, மற்ற நடிகர்களில் இருந்து தான் எவ்வாறு வேறுபடுகிறேன் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தி இருந்தார் அஜித். அதனாலோ என்னவோ ரசிகர்களின் எண்ணிக்கை, அவருக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment