Advertisment
Presenting Partner
Desktop GIF

1 வெற்றி 4 தோல்வி: தன்னம்பிக்கையை இழக்காத அஜித்!

அஜித்தின் ஹீரோ கனவு, மணிரத்னம் மூலமாக நிறைவேறியிருக்க வேண்டியது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதால், முதல் வாய்ப்பே அஜித்துக்கு தோல்வி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Thala Ajith

Happy Birthday Thala Ajith

Happy Birthday Ajith: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித், இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அஜித்தின் சினிமா பயணம் கடினமானது, அதோடு சுவாரஸ்யமானதும் கூட...

Advertisment

நடிகர் ரிஷி கபூர் மறைவு: அடுத்தடுத்த மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட்

அஜித்தின் சினிமா பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அது ஒரு கரடுமுரடான பாதை. படங்களில் அவரது உழைப்பும், அவர் பெற்ற தோல்வியும் அதிகம். தடைகளை உடைப்பதும், புகழைக் கொண்டாடாமல் இருப்பதும், வெற்றியையும் - தோல்வியையும் சமமாகப் பார்ப்பதுமே அஜித்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணிகள்.

சினிமா பின்னணி இருந்தால் எளிதில் சினிமாவுக்குள் நுழைந்து விடலாம். ஆனால், திறமையும், உழைப்பும் மட்டுமே அதில் நிலைத்திருக்கச் செய்யும். சினிமாவுக்கு தொடர்பில்லாத நடுத்தரக் குடும்பத்திலிருந்து திரைப்பயணத்தை தொடங்கிய அஜித், ஒரு பக்கம் பைக் ரேஸ், இன்னொரு பக்கம் சினிமா கனவு என வாய்ப்பு தேடி அலைகிறார். ஆனால் முதலில் கிடைத்ததோ மாடலிங். அதன் மூலம் ஒளிப்பதிவாளர், பி.சி.ஸ்ரீராமின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் பின்பு அஜித்தை, இயக்குநர் மணிரத்னத்திடம் சேர்க்கிறது.

அஜித்தின் ஹீரோ கனவு, மணிரத்னம் மூலமாக நிறைவேறியிருக்க வேண்டியது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதால், முதல் வாய்ப்பே அஜித்துக்கு தோல்வி. எப்படியாவது சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்றிருந்த அஜித்துக்கு, கொல்லப்புடி சீனிவாச ராவ் இயக்கத்தில் ’பிரேம புஸ்தகம்’ எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த நேரத்தில் அமராவதி பட வேலைகளில் இருந்த இயக்குநர் செல்வாவுக்கு அஜித்தின் புகைப்படம் கிடைக்கிறது. கதைக்கு இவர் சரியாக இருப்பார் என்றெண்ணி, முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹீரோவுக்கு பதிலாக அஜித்தை நடிக்க வைக்கிறார்.

அஜித்தில் திரை வாழ்க்கையின் முதல் படமாக ‘அமராவதி’ வெளியாகிறது. படம் ஆவரேஜ் தான். முதல் படத்திலேயே ஹிட் கொடுக்காவிட்டால், புதுமுக நடிகர் போல மீண்டும், வாய்ப்பு தேடி அலையவேண்டும். அப்படி ’பாசமலர்கள்’, ’பவித்ரா’, ’ராஜாவின் பார்வையிலே' என தொடர்ந்து மூன்று படங்கள். மூன்றுமே பெரிதாக வெற்றியைத் தரவில்லை. ஆனால், அஜித்தும், விஜய்யும் இணைந்து நடித்த படமாக எப்போதும் மனதில் நிற்கிறது ‘ராஜாவின் பார்வையிலே’.

மணிரத்னம் படத்தில் அறிமுகமாக வேண்டிய அஜித்துக்கு, முதல் வெற்றியாக மணிரத்னம் தயாரித்த ‘ஆசை’ படம் அமைந்தது. தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட். படமும் 200 நாட்கள் ஓடியது. ஆசை கொடுத்த வெற்றியால், ‘வான்மதி’, ‘கல்லூரி வாசல்’, ‘மைனர் மாப்பிள்ளை’ மற்றும் ‘காதல் கோட்டை’ என தொடர்ந்து 4 படங்கள் வெளியாகின. இதில் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களம். இதில் காதல் கோட்டை அஜித்தை அடுத்த தளத்துக்கு நகர்த்தியது. அந்த பார்க்காத காதல், இன்று வரை தமிழ் சினிமாவின் ‘எவர் க்ரீன்’. அதுவும் கொட்டும் மழையில் ஆட்டோ ட்ரைவர் - பயணியாக காதலர்கள் பயணிக்கும் போது, பார்வையாளர்களால் இப்போதும் ’ஃபிங்கர்ஸ் க்ராஸ்ட்’ என்ற உணர்வை தவிர்க்க முடிவதில்லை.

அதன் பின்னர் சில தோல்விகள். இயக்குநர் சரணின் ‘காதல் மன்னன்’ மீண்டும் வெற்றி. பிறகு, ‘வாலி’ எஸ்.ஜே.சூர்யா, ‘முகவரி’ துரை, ‘தீனா’ ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா, ‘கிரீடம்’ ஏ.எல்.விஜய், என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குநர்களை அறிமுகப்படுத்துகிறார்.

இப்படி புதுமுக இயக்குநரின் படத்தில் துணிந்து நடிப்பதெல்லாம் சாராதண விஷயமல்ல. இதற்கெல்லாம் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே. இவற்றில் ரசிகர்களோடு அஜித்தை இன்னும் நெருக்கமாக்கிய ஒரு படமென்றால் அது வாலி. அஜித்தின் முதல் இரட்டை வேட திரைப்படம். எல்லாப் பாடலும் ஹிட்.

அஜித்தின் கிராஃபில் அதிகமாக காதல் படங்களே அதிகம் நடித்திருந்த நேரம். முதன்முறையாக ஒரு ஆக்‌ஷன் கலந்த ரொமான்டிக் படமாகத் திரைக்கு வருகிறது. அது தான் ’அமர்க்களம்’. படத்தில் ஆக்‌ஷனையும், நிஜ வாழ்க்கையில் காதலையும் அஜித் பெற்ற மிக முக்கியமான படம். அஜித்துக்கு ஒரு படம் ஹிட் கொடுத்தால், தொடர்ந்து இரண்டு படங்கள் ஃப்ளாப் ஆகிவிடும்.

அஜித்தை ‘தல’யாக மாற்றிய படம் தீனா. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து தோல்வி. அஜித்தின் நாட்டம் பைக் ரேஸ் மீது சென்றதும் இந்த நேரத்தில் தான். தொட்டது எதுவும் கைகொடுக்கவில்லை. துவண்டுபோயிருந்த அஜித்துக்கு வரலாறு படம் கை கொடுக்கிறது. ரொமான்டிக் ஹீரோ, மாஸ் ஹீரோவாக இருந்தவரை ஸ்டைலிஷ் ஹீரோவாக ’பில்லா’ திரைப்படம் மாற்றுகிறது.

ஹீரோ என்றால் நல்லவனாக மட்டும் தான் இருக்கவேண்டுமா? நெகட்டிவ் ரோலில் ஒரு படத்தைப் பண்ணலாம் என மீண்டும் நினைத்தவருக்கு ஐம்பதாவது படம் ‘மங்காத்தா’. தனக்கு எது சரியாக வரும், என்ன மாதிரியான நடிப்பு வரும், இனி எந்தமாதிரியான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற தெளிவுடன் அஜித் தேர்ந்தெடுத்து வெற்றி கொடுத்த படம் ’ஆரம்பம்’.

கெளதம் மேனனுடன் காக்க காக்க ஸ்கிரிப்டில் நடிக்க வேண்டிய அஜித், ’என்னை அறிந்தால்’ படத்தில் கைக்கோர்க்கிறார். நட்புக்காக ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ். மீண்டும் நட்புக்காக சிவாவுடன் நான்கு படங்கள். வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம். கதையில் விமர்சனம் இருந்தாலும், ’ஆரம்பம்’ படத்திலிருந்து ’நேர்க்கொண்ட பார்வை’ வரை வசூலில் படங்கள் சறுக்கவில்லை. ரசிகர்களும் அஜித்தை கொண்டாடவும் தவறவில்லை.

ஒப்பில்லா திறமை கொண்ட மகா நடிகன் இர்பான் – மலரும் நினைவுகளும், மறக்க முடியா புகைப்படங்களும்

ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். ரசிகர்களைச் சந்திக்கமாட்டார். எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார். சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் என பல குற்றச்சாட்டுகள் அஜித் மீது இருந்தாலும், அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. நடிப்பு மட்டுமே தனக்காக வேலை என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அதனால் தான் பலமுறை தோல்வியை தழுவிய போதெல்லாம், கடின உழைப்பையும், நம்பிக்கையையும் அதிகப்படுத்தி, சிறந்த அவுட் புட்டை அவரால் கொடுக்க முடிந்தது. சிம்பிளாக சொல்ல வேண்டுமெனில், ஹீ இஸ் லைக் எ ஃபீனிக்ஸ் பேர்டு...!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Ajith Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment