Happy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்
Happy birthday Vijay: விஜய் இன்று(ஜூன் 22) பிறந்த நாள் கொண்டும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக விஜய் படப் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் காட்சியும் அமைந்தன.
Happy birthday Vijay: விஜய் பிறந்த தினத்தன்று சர்கார் படத்தின் மேலும் இரு போஸ்டர்களை வெளியிட்டனர். இவற்றை விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
சர்கார்… விஜய் நடிப்பில் தயாராகும் 62-வது படம்! படத்தின் தயாரிப்பு பணிகள் பாதி முடிந்த நிலையில் நேற்று (ஜூன் 21) படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாகி, முக்கால் மணி நேரத்திற்குள் ட்விட்டர் டிரெண்டிங்கில் நெ1 ஆனது. முகத்தில் தாடியுடன் சிகரெட் பற்ற வைக்கும் விதமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் காட்சி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும் சர்ச்சைகளை விதைக்கவும் தவறவில்லை.
Happy birthday Vijay: விஜய் இன்று(ஜூன் 22) பிறந்த நாள் கொண்டும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக விஜய் படப் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் காட்சியும் அமைந்தன.
இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு சர்கார் படத்தின் 2-வது போஸ்டர் வெளியானது. அதில் விஜய் நவீன ரக கார் ஒன்றினுள் அமர்ந்தபடி, ஆப்பிள் லேப் டாப்பை இயக்கியபடி ஸ்டைலிஷாக காட்சி தருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ், நடிகர் விஜய், படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
Vijay’s 44th birthday: விஜய்-யின் சர்க்கார் பட 3-வது போஸ்டர்
இதற்கிடையே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது முகநூல் பக்கத்தில் சர்கார் படத்தின் இன்னொரு காட்சியையும் பகிர்ந்தார். அதில் விஜய் தனது இரு கைகளையும் ‘பேன்ட்’ பாக்கெட்டில் விட்டபடி ஸ்டைலாக நிற்கிறார்.
Vijay’s 44th birthday: விஜய்-யின் சர்க்கார் பட 2-வது போஸ்டர்
தூத்துக்குடி சம்பவம் காரணமாக பிறந்த நாளை கொண்டாடாமல் விஜய் தவிர்த்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அவரது ரசிகர்கள் சர்கார் படக் காட்சிகளையே கொண்டாடி மகிழ்கிறார்கள்.