திரையுலகமே கொண்டாடும் தளபதி பிறந்த நாள்.. அப்படி என்ன ஸ்பெஷல் விஜய்யிடம்!!!!

Happy birthday Vijay : ஒட்டு மொத்த திரையுலகமே கொண்டாடுகிறது என்றால் அது வேறலெவல் மாஸ்

தமிழ் திரையுலககில் ’மெர்சல்’ திரைப்படம் மூலம் தளபதியாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் விஜய்-க்கு இன்று 44 ஆவது பிறந்த நாள். ஒரு பக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை மனதில் வைத்து தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். ஆனால் ஒரு பக்கம் வழக்கம் போல் அவரது ரசிகர்கள் விஜய்யின் பிறந்த நாளை அதகளப்படுத்தி வருகின்றனர்.

கூடவே டபுள் டமக்காவாக நேற்று(21.6.18) மாலை விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டில் வெளியானது. ‘சர்கார்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டர் ரசிகர்களை வெகுளவில் கவர்ந்துள்ளது. மிடுக்கான் தோற்றத்துடன் வழக்கம் போல் விஜய் இளமையாகவும், கெத்தாகவும் படத்தில் வலம் வருவது உறுதி என்பது போஸ்டரிலியே தெரிந்து விட்டது. ஒரு போஸ்டர் என்றாலே ரசிகர்கள் ஒரு வாரம் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் சர்கார் படம் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் என்பதால் 3 போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

சர்கார் திரைப்படம் அப்படி என்ன ரொம்ப ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? விஜய் நடித்தாலே அந்த படம் ஸ்பெஷல் தானா பாஸ்.. மெர்சல் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம். கூடவே ஏ.ஆர் ரகுமான் கூட்டணி சொல்லவா வேண்டும். ரசிகர்கள் விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் அது மாஸ். ஆனால் அவர்களுடன் சேர்ந்து ஒட்டு மொத்த திரையுலகமே கொண்டாடுகிறது என்றால் அது வேறலெவல் மாஸ்.. இரவு 12 மணி முதல் தளபதி விஜய்யுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்திகளை வீடியோவாகவும், ஃபோட்டோவாகவும் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்க்கு பிடித்தமானது என்ன தெரியுமா?

அனல் பறக்கவிட்ட விஜய்யின் மறக்க முடியாத அந்த 5 வசனங்கள்!!!

×Close
×Close