அதிக வசூல் செய்த 5 தமிழ் படங்கள்: ஓடிடி தளங்களில் தாராளமாகப் பார்க்கலாம்!

இன்று, அதிகமான மக்கள் மொழி தடையை உடைத்து தமிழ் சினிமாவை கொண்டாடி வருகிறார்கள்.

By: Updated: June 10, 2020, 01:34:54 PM

Highest Grossing Tamil Movies: காதல், ஆக்‌ஷன், த்ரில்லர், கமர்ஷியல் மசாலா எதுவாக இருந்தாலும் தமிழ் சினிமாக்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெரும். தமிழ் திரைப்படங்கள் எப்போதுமே மக்களிடையே படு பிரபலம். இணையற்ற ரசிகர்களின் எண்ணிக்கையை இது பெற்றுள்ளது. தமிழ் சினிமா மார்க்கெட் இப்போது கிட்டத்தட்ட பாலிவுட்டுக்கு இணையாக உள்ளது. இன்று, அதிகமான மக்கள் மொழி தடையை உடைத்து தமிழ் சினிமாவை அனுபவித்து வருகிறார்கள். தமிழ் திரைப்படங்கள் இப்போது பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டி வருகின்றன. அந்த வகையில், அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் எம்.எக்ஸ் பிளேயர் ஆகியவற்றில் இருக்கும், அதிக வசூல் செய்த சில தமிழ் திரைப்படங்களைப் பார்ப்போம்.

ஓராண்டு இலவசம்: ஜியோ அள்ளிவிடும் சலுகைகளைப் பாருங்க!

 

1. பிகில் – அமேசான் ப்ரைம் 

இயக்குநர் அட்லீ இயக்கிய பிகில் படத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக் மற்றும் கதிர் ஆகியோர் நடித்த விளையாட்டு அதிரடி படம். முன்னாள் கால்பந்து நட்சத்திரமான மைக்கேலைச் சுற்றி கதை சுழல்கிறது. அவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தனது விளையாட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக தந்தையின் கிரிமினல் செயல்களில் கவனம் செலுத்துகிறார். இருப்பினும், ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருக்கும் அவரது நண்பர் காயமடைந்தால், மைக்கேல் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்கிறார். உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ₹ 300 கோடிக்கு மேல் சம்பாதித்த இந்த படம் 2019-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவெடுத்தது.

2. கபாலி – நெட்ஃபிளிக்ஸ்


ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, வின்ஸ்டன் சாவோ மற்றும் சாய் தன்ஷிகா ஆகியோர் நடித்த ’கபாலி’ படம், கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்டது. 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தபின், வயதான கேங்ஸ்டர் தனக்கு அநீதி இழைத்த அனைவரையும் பழிவாங்கத் திரும்புகிறார். அதே நேரத்தில் காணாமல் போன அவரது மனைவி மற்றும் மகளையும் தேடுகிறார். பா. ரஞ்சித் இயக்கிய இந்த ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் சுமார்295 கோடி (உலகளவில் மொத்தம்) சம்பாதித்ததாக ஐஎம்டிபி தெரிவித்துள்ளது.

3. விஸ்வரூபம் – டிஸ்னி, ஹாட்ஸ்டார்

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார் மற்றும் ஜெய்தீப் அஹ்லவத் ஆகியோர் நடித்துள்ள இந்த கதை, கணவனை விவாகரத்து செய்ய விரும்பும் நிருபமா என்ற திருமணமான பெண்ணைச் சுற்றி வருகிறது. நிருபாமா தனது கணவர் பற்றிய சில திடுக்கிடும் ரகசியங்களையும், அல்கொய்தாவின் தலைவருடனான தொடர்புகளையும் வெளிப்படுத்தும்போது கதை தீவிரமாகிறது. கமல்ஹாசன் எழுதி தயாரித்து இயக்கிய இந்த உளவு அதிரடி திரில்லர் படம், உலகளவில் ₹ 220 கோடிக்கு மேல் வசூலித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

4. தர்பார் – அமேசான் ப்ரைம் 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தில், ரஜினிகாந்த், பிரதீக் பப்பர், நயன்தாரா மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஒரு சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளரான சுனில், தனது மகளை கொன்றதும்,  இழப்பிலிருந்து மீண்டு வந்து பலி வாங்குகிறார் கமிஷ்னர். இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இது உலக பாக்ஸ் ஆபிஸில் சுமார் 9 209.3 கோடியை வசூலித்தது.

சென்னை திமுக.வின் கம்பீரம் சரிந்தது… ஜெ.அன்பழகன் வாழ்க்கை குறிப்பு

5. பேட்ட – நெட்ஃப்ளிக்ஸ்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ’பேட்டா’, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர்களை கொண்டிருந்தது. வயதான விடுதி வார்டன் காளியை மையப்படுத்தியிருந்தது. 225.5 கோடியுடன் (உலகளாவிய மொத்தம்), விஜய்யின் பிகில் படம் ரிலீஸாகும் வரை, 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ‘பேட்ட’ இருந்தது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Highest grossing tamil movies bigil darbar petta kabali rajinikanth vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X