Reliance Jio Disney+ Hotstar offer: ரூபாய் 401/-ல் தொடங்கும் ஜியோ திட்டங்களை எடுக்கும் அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களும் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள்.
jio prepaid hotstar offer, reliance jio hotstar offer, disney hotstar offer,
ஜியோ, ஜியோ ஹாட் ஸ்டார், ஜியோ டிஸ்னி ஹாட்ஸ்டார்
JIO Tamil News:ரிலையன்ஸ் ஜியோ மேலும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. அதே நோக்கத்தை மனதில் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் சேவையுடன் (Disney+ Hotstar streaming service) இணைந்துள்ளது. ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு ஆண்டுக்கு Disney+ Hotstar VIP உறுப்பினர் இலவச அறிமுக சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் அனைத்து ஜியோ பயனர்களும் இந்த சலுகையின் பலன்களைப் பெற தகுதியானவர்கள் இல்லை.
Advertisment
இந்த இணைப்பு ஜியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு பெரும் நன்மையை வழங்கும் என்று ஜியோ கூறுகிறது.
jio disney hotstar one year free offer: ஜியோ- டிஸ்னி + ஹாட்ஸ்டார் சலுகை என்றால் என்ன?
ரிலையன்ஸ் ஜியோ டிஸ்னி+ ஹட்ஸ்டாருடன் இணைந்து ஒரு வருடத்துக்கு ஸ்ட்ரீமிங் தளத்தின் இலவச சேவையை அறிமுக சலுகையாக வழங்கும். இது அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு உத்தி. இந்த டிஸ்னி+ஹாட்ஸ்டார் சலுகையின் மதிப்பு ரூபாய் 399/-. டிஸ்னி+ஹாட்ஸ்டார் VIP சந்தா ஹாட்ஸ்டார் ஸ்பெஷல், அளவில்லாத லைவ் விளையாட்டுகள், சமீபத்திய பாலிவுட் திரைப்படங்கள், சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மற்றும் அதிக உள்ளடக்கத்தை வழங்குகிறது.
ஜியோ - டிஸ்னி+ஹாட்ஸ்டார் சலுகை குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ பயனர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. ரூபாய் 401/-ல் தொடங்கும் ஜியோ திட்டங்களை எடுக்கும் அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களும் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். பழைய மற்றும் புதிய ஜியோ பயனர்கள் இந்த சலுகையை பெற முடியும்.
ஜியோ- டிஸ்னி +ஹாட்ஸ்டார் சலுகையுடன் வரும் திட்டங்கள்
— ரூபாய் 401: இந்த திட்டத்தில் 90GB டேட்டா, அளவில்லாத குரல் அழைப்புகள், 28 நாட்கள் ஜியோ ஆப்களை அணுகும் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூபாய் 399/- மதிப்பிலான ஒரு வருடத்துக்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா இலவசமாக கிடைக்கும்.
— ரூபாய் 2599: இந்த ஆண்டு திட்டத்தில் 740 GB டேட்டா, அளவில்லாத குரல் அழைப்புகள், 365 நாட்களுக்கு ஜியோ ஆப்களை அணுகும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு ரூபாய் 399/- மதிப்பிலான ஒரு ஆண்டுக்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா இலவசமாக கிடைக்கும்.
— Add-on data packs: ரூபாய் 612/- க்கான combo-pack of data add-on vouchers க்கு டேட்டா நன்மைகளுடன், ரூபாய் 399/- மதிப்பிலான ஒரு ஆண்டுக்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா இலவசமாக கிடைக்கும். ரூபாய் 612, ரூபாய் 1004, ரூபாய் 1206 மற்றும் ரூபாய் 1208 திட்டங்கள் உட்பட.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil