New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/ar-rahman.jpg)
Hum Haar Nahi Maanenge AR Rahman album 1 share gives rs 500 to PM Cares covid19 fund
ஒரு நல்ல காரியத்திற்காக இந்த பாடல் எங்கள் அனைவரையும் இணைத்துள்ளது. அதே போன்று இந்த தேசமும் ஒன்றிணைய இந்த பாடல் உத்வேகம் தரும்
Hum Haar Nahi Maanenge AR Rahman album 1 share gives rs 500 to PM Cares covid19 fund
Hum Haar Nahi Maanenge AR Rahman album 1 share gives rs 500 to PM Cares covid19 fund : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.அதனை தடுப்பதற்காக உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசியல்வாதிகளும், தொண்டு நிறுவனங்களும், தனி நபர்களும், சினிமா பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவியை அரசின் மூலம் மக்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்த வரிசையில் ஏ.ஆர்.ரஹ்மான் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் ஒன்றை நெற்று இரவு 7 மணிக்கு முகநூல் நேரலையில் வெளியுட்டுள்ளார். இந்த பாடலை இந்தியாவில் உள்ள பல்வேறு பின்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இந்த பாடலின் ஹைலைட் என்னவென்றால் ஒருமுறை இந்த பாடலை சேர் செய்தால் hdfc வங்கி ,பிரதமர் நிவாரண நிதி கணக்கான pm cares க்கு சென்றுவிடும்.
”ஹம் ஹார் நஹி மானேங்கே” ப்ரஸூன் ஜோஷி எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், கத்திஜா ரஹ்மான். சிவமணி, ஷ்ருதி ஹாசன், ஜோனிட்டா காந்தி, மிகா சிங், ஷாஷா திருப்பதி, மோஹித் சௌஹான், ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், ஹர்ஸ்தீப் கௌர், மோஹினி தேய், அசத் ஹான், நீத்தி மோகன், அபேய் ஜோத்கபூர் ஆகியோர் அந்த பாடலை பாடியுள்ளனர்.
மக்கள் மத்தியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சேர்ந்தே மீள்வோம் என்ற பொருள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் குறித்து ஏ. ஆர். ரஹ்மான் ”ஒரு நல்ல காரியத்திற்காக இந்த பாடல் எங்கள் அனைவரையும் இணைத்துள்ளது. அதே போன்று இந்த தேசமும் ஒன்றிணைய இந்த பாடல் உத்வேகம் தரும்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : சென்னையில் கொரோனா பரவலின் மையமாக மாறும் கோயம்பேடு காய்கறி சந்தை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.