Advertisment
Presenting Partner
Desktop GIF

மூணாறு நிலச்சரிவு : உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கேற்கிறேன் - சூர்யா

குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் நலனுக்காகவும் பிறந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு.

author-image
WebDesk
New Update
Idukki landslide Actor suriya condolences to those who lost their kin

கேராள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் அமைந்திருக்கும் பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பகுதியில் அமைந்திருக்கும் கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ளாண்டேசன் கம்பெனியின் ஊழியர்கள் இரண்டு வரிசைகளில் நேர் நேர் பார்த்த வீடுகளில் வசித்து வந்தனர்.  சோலா காட்டுப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக உருண்டு வந்த பாறைகள் சாய்வான பகுதியில் அமைந்திருந்த குடியிருப்பின் மேல் விழுந்து அப்பகுதியை அப்படியே தரைமாட்டமாக்கியது.

Advertisment

இந்த விபத்தில் 50ற்கும் மேற்பட்டோர்களை சடலமாக மீட்டுள்ளனர் மாநில மீட்புப் படையினர். பெட்டிமுடியில் ஏற்பட்ட விபத்து அனைவரின் மனதிலும் பெரிய வடுவாக அமைந்துள்ளது. அந்த நபர்கள் அனைவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குறித்து உருக்கமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். “குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் நலனுக்காகவும் பிறந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க : இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி? முக்கிய காரணங்கள் என்னென்ன?

Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment