IE Tamil readers opinion on Actress Jyothika Controversial speech on Peruvudayar Koil : தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் ஜோதிகா பேசியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவில்களுக்கு கொடுக்கப்படும் நிதியை பள்ளிக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Its really bold for a heroine 2 say what she said, even some big heros dt approch these topics. Instead of spreading hate in the name of religion, degrading women & doing politics out of it! Better improv d hospitals & school instead of fighting for a religion! #jyothika #jyotika https://t.co/1xhjCAVJZS
— Dhushanthy (@Dhushanthy2) April 21, 2020
கோவில்களுக்கும் மதங்களுக்கும் தரப்படும் முக்கியத்துவத்தை மனித உயிர்களுக்கும் அறியாமையை போக்கும் மருத்துவமனைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் அளிப்பதில் தவறு ஏதும் இல்லையே. நடிகை ஜோதிகா பேசியது சரியா? தவறா என நாங்கள் நம்முடைய வாசகர்களிடம் கேட்டோம். அவர்களின் பதில்கள் இங்கே!
மேலும் படிக்க : ’கோயிலுக்கு இதெல்லாம் பண்றீங்களே?’ – சர்ச்சையாகும் ஜோதிகாவின் பேச்சு
ஜோதிகா பேசியது தவறு என்று 10 ஆயிரம் நபர்கள் வாக்களித்துள்ளனர். அவர் பேசியது மிகவும் சரியானது என்று 6 ஆயிரம் நபர்கள் வாக்களித்துள்ளனர். தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இன்றைய சூழலில் அது போன்ற கோவில் சாத்தியமாவதும், அதற்கு வழங்கப்படும் கொடை என்பதும் யோசனைகளுக்கு அப்பாற்பட்டது. முன்னணி நடிகை என்பதால், ஏதாவது கருத்து கூறலாம் என்று, மற்றவர்களின் மணம் புண்படுவது போன்ற கருத்துகளை அவர் கூறாமல் இருந்திருக்கலாம் என்றும் தங்களின் ஆதங்கத்தினை பதிவு செய்திருந்தனர்.
வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து மத நம்பிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என்றும் பலர் அறிவித்துள்ளனர்.
ஆடம்பரம் என்பது கோவில்களில் மட்டும் இல்லை. திரைத்துறையிலும் தான் இருக்கிறது. அங்கு செலவிடப்படும் பணத்தினை பயன்படுத்தி கல்வி கூடங்கள் கட்டலாமே என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பலர் ஜோதிகாவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
எந்த பெரிய ஹீரோக்களும் சொல்ல தயங்கும், பேச யோசிக்கும் விசயங்களை ஜோ பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் சொல்வது போன்று மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் பலர் தங்களின் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Ie tamil readers opinion on actress jyothika controversial speech on peruvudayar koil
இங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
அதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்?
டெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!