இலியானா தனது காதலருடன். (புகைப்படம்: இலியானா டி'குரூஸ்/ இன்ஸ்டாகிராம்)
நடிகை இலியானா டி குரூஸ் இறுதியாக தான் ரகசியமாக வைத்திருந்த தனது காதலனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இருப்பினும் காதலன் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை இலியானா, தற்போது தனது ‘டேட் நைட்’ மற்றும் அவரது டேட்டின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
Advertisment
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் ஹார்ட் எமோஜியுடன் புகைப்படங்களை இலியானா பகிர்ந்துள்ளார். இலியானா சிவப்பு நிற உடையணிந்துள்ளார், அவரது காதலர் கருப்பு சட்டை அணிந்து தாடியுடன் இருக்கிறார். முன்னதாக அவரது மங்கலான புகைப்படத்தை இலியானா பகிர்ந்திருந்தார்.
(புகைப்படம்: இலியானா டி க்ரூஸ்/ இன்ஸ்டாகிராம்) நடிகை இலியானா மூன்று மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் குழந்தை ஆடைகளின் புகைப்படத்துடன் தனது கர்ப்பத்தை அறிவித்து, "விரைவில் வருகை, என் குட்டி அன்பே உன்னை சந்திக்க காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.
Advertisment
Advertisement
இலியானா தனது கர்ப்ப பயணத்தின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார், மேலும் தனது துணையையும் பாராட்டி வந்துள்ளார். "இதை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை, எனவே இந்த பயணத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். உங்களுக்குள் வளரும் ஒரு வாழ்க்கையை உணருவது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்கத் தொடங்க முடியாது. பெரும்பாலான நாட்களில் நான் என் வயிறு மேல் எழும்புவதை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன், விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். பின்னர் சில நாட்கள் விவரிக்க முடியாத அளவுக்கு கடினமானவை. எனவே முயற்சி செய்கிறேன். அவை மிகப்பெரியவை." என்று இலியானா பதிவிட்டுள்ளார்.
இலியானா தன் துணையைப் பற்றி, “என்னிடம் கருணை காட்டுவதை நான் மறந்த நாட்களில், இந்த அழகான மனிதன் என் துணையாக இருந்தான். நான் உடையத் தொடங்குவதை அவர் உணரும்போது அவர் என்னை தாங்கினார். மற்றும் கண்ணீரை துடைத்தார். மேலும் என்னை சிரிக்க வைப்பதற்காக முட்டாள்தனமான நகைச்சுவைகளை கூறினார். அல்லது அந்தத் தருணத்தில் எனக்குத் தேவையானது அதுதான் என்று அவருக்குத் தெரிந்தவுடன் கட்டிப்பிடித்தார். இனி அவை எல்லாம் அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை." என்று பதிவிட்டுள்ளார்.
இலியானா சமீபத்தில் பாட்ஷா மற்றும் கோல்ட்கார்ட்ஸ் பாடலான "சப் கசாப்" இல் நடித்திருந்தார். லவ்வர்ஸ் மற்றும் அன்ஃபெயர் அண்ட் லவ்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil