/tamil-ie/media/media_files/uploads/2020/05/21-covid-19-cases-in-Raghava-Lawrence-trust.jpg)
21 covid 19 cases in Raghava Lawrence trust
Covid 19 Cases: தமிழகத்தில் நாளுக்கு நாள், கொரோனா வைரஸின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 549 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். நேற்றைய எண்ணிக்கைகளின்படி, புதிய பாதிப்புகளின் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது.
வில்லியாக மிரட்டியவர்: பூஜா லோகேஷை ஞாபகம் இருக்கா?
அதே வேளையில் கொரோனா பாதிப்பால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது வரை 8,731 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் இருக்கும் சில குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
செல்லப் பிராணிகளுடன் குவாரண்டைனை கழிக்கும் நடிகைகள் – படத்தொகுப்பு
இந்நிலையால் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. லாரன்ஸ் அறக்கட்டளையில் உள்ள 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்கள் என 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மருத்துவ முகாமிற்க்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டுள்ள அத்தனை பேரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அறக்கட்டளையில் உள்ள மற்றவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் எனத் தெரிகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.