scorecardresearch

வில்லியாக மிரட்டியவர்: பூஜா லோகேஷை ஞாபகம் இருக்கா?

நாங்க புரொடியூஸ் பண்ற நிகழ்ச்சியில் எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் நான் தான் காஸ்டியூம் டிசைன் பண்றேன்.

வில்லியாக மிரட்டியவர்: பூஜா லோகேஷை ஞாபகம் இருக்கா?
Tamil Serial News, Pooja Lokesh

Tamil Serial News: கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு, சீரியல்களில் தனது வில்லத்தனத்தால், ரசிகர்களை அலற விட்டவர் பூஜா. இவருக்குள் இப்படியொரு வில்லத்தனமா என்றுக் கூட நம்மில் பலருக்கும் தோன்றியிருக்கும்.

செல்லப் பிராணிகளுடன் குவாரண்டைனை கழிக்கும் நடிகைகள் – படத்தொகுப்பு

14 வயதில் குங்குமம் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய பூஜா, அதன் பிறகு பல சீரியல்களில் நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது சீரியல்களில் பிரேக் எடுத்திருக்கும் இவர், ஃபேஷன் டிஸைனிங்கில் பிஸியாக இருக்கிறார்.

முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த பூஜா, “சீரியல்களில் என்னை வில்லியாகவே பார்த்திருப்பீங்க. நிஜத்துல நான் பயங்கர ஜாலி பர்சன். யார்கிட்டேயும் சண்டைப் போடுறது பிடிக்காது. என் தாத்தாவும், பாட்டியும் கன்னட மொழியில் ஃபேமஸான ஆர்ட்டிஸ்ட். எனக்குள்ளும் நடிப்பு விதை இருந்துச்சு. இப்போ, நான் ஃபேமிலியோடு பெங்களூரில் செம ஹேப்பியா இருக்கேன். 14 வயசுல மீடியா வாய்ப்பு கிடைச்சது. கன்னடத்தில் நிறைய படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்து, ‘குங்குமம்’ மெகா சீரியலிலும் நடிக்க, குஷ்பு மேடம் கூப்பிட்டாங்க. அப்படித்தான் சிங்கார சென்னைக்கு வந்தேன். தமிழ் சீரியலில் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களே கிடைச்சது.

என் முகத்துக்கும் நெகட்டிவ் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்துச்சு. என் நடிப்பைப் பார்த்துட்டு வெளியிலிருந்து நிறைய திட்டு வந்தாலும், அது எனர்ஜியைத்தான் கொடுத்துச்சு. அதுதானே நம் நடிப்புக்கு உண்மையான விருது. என் தம்பியும் நானும் சேர்ந்து ஒரு புரடெக்‌ஷன் ஹவுஸ் நடத்திட்டு இருக்கோம். மஜா டாக்கீஸ் (Majaa Talkies) என்கிற கன்னட நிகழ்ச்சியை புரொடியூஸ் பண்றோம். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என் தம்பி தான். நான் நடிச்சுட்டு இருந்தப்பவே காஸ்டியூம் டிசைனிங் மேலே ஆர்வமா இருந்தேன்.

கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் சீரியலில் எனக்கான காஸ்டியூமை நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இப்போ நாங்க புரொடியூஸ் பண்ற நிகழ்ச்சியில் எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் நான் தான் காஸ்டியூம் டிசைன் பண்றேன். குறிப்பா, என் தம்பிக்கு ஒவ்வொரு ஷோவுக்கும் ஸ்பெஷலா டிசைன் பண்றேன். பொண்ணுங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்றது ரொம்ப ஈஸி. பசங்களுக்கு பண்றது தான் சவால். நார்மலா அவங்க போடும் பேன்ட், ஷர்ட்லேயே நம்ம கிரியேட்டிவை காட்டணும். எனக்குப் பிடிச்ச அந்த வேலையைத்தான் இப்போ பண்ணிட்டிருக்கேன்” என்றார்.

தமிழ் சீரியல் ரீ எண்ட்ரி குறித்து கேட்டதற்கு, ”நிறைய தமிழ் சீரியல் வாய்ப்பு வருது. இப்பவும் என்னைச் சந்திக்கும் தமிழ் ரசிகர்கள் ‘ப்ளீஸ்… மறுபடியும் நடிக்க வாங்க’னு அன்பு மழையில் நனைக்கிறாங்க. அந்த அன்புக்காகவே சீக்கிரமா ரீ-என்ட்ரி கொடுக்கிறேன். அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

ஊரடங்குக்கு விரைவில் டாடா : இயல்புநிலைக்கு திரும்ப தயாராகிறது சென்னை

எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. சினிமாவும் சீரியலும் மட்டும் தான் என் உலகம். என் ஃபேமிலியும் என் விருப்பத்தை புரிஞ்சுட்டு சப்போர்ட் பண்றாங்க. எதிர்காலத்தில் நிறைய படங்களை சப்போர்ட் பண்ணி, சக்ஸஸ்ஃபுல் வுமனா வலம் வரணும்” என்றார். ஓய்வில் இருக்கும் போது நிறைய படங்களைப் பார்ப்பதும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதையும் தான், முதல் வேலையாக செய்கிறாராம் பூஜா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial news villi actress pooja lokesh