scorecardresearch

மீண்டும் சினிமாவில் மும்முரம் காட்டும் கமல்: இந்தியன் 2 படத்தில் 2 முக்கிய நடிகைகள் தேர்வு!

Indian 2: முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தப்பட்டு, 2 கட்ட படபிடிப்புகளும் நடத்தப்பட்டன.

Kamal hassan, indian 2, aishwarya rajesh, priya bhavani shankar
கமல் ஹாசன்

Kamal Haasan’s Indian 2: இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, 23 வருடம் கழித்து மீண்டும் கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.  லைகா புரடக்‌ஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை அனிருத் எனவும் அறிவிக்கப்பட்டது. முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தப்பட்டு, 2 கட்ட படபிடிப்புகளும் நடத்தப்பட்டன. பின்னர் அரசியலில் கமல் பிஸியாகிவிட்டதால், ப்ராஜெக்ட் ஹோல்ட் செய்யப்பட்டது.

Aishwarya Rajesh And Priya Bhavani Shankar ஐஸ்வர்யா ராஜேஷ் – பிரியா பவானி சங்கர்[/caption]

இந்நிலையில் தற்போது மீண்டும் 2 முக்கிய நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும், இந்தியன் 2 படத்தில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.

தலைவன் இருக்கின்றான்: கமலுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

அதோடு இந்தியன் 2 படபிடிப்பை மீண்டும் ஆகஸ்டில் துவங்க இருக்கிறாராம் கமல். அதில் கமல், காஜல், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Indian 2 kamal haasan aishwarya rajesh priya bhavani shankar