Period. End of Sentence Documentary in Oscars 2019 : 2019ம் ஆஸ்கர் விருதை கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய பீரியட் குறும்படம் வென்றிருப்பது தமிழக மக்களுக்கு உற்ச்சாகத்தை அளித்துள்ளது.
மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ என்கிற டாக்குமெண்டரி ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த குறும்படத்திற்கான படப்பிடிப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் நீடிக்கிறது.
Oscars 2019 Period End of Sentence : கோவை அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய படம் ஆஸ்கர் விருது வென்றது
விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த பீரியட் டாக்குமெண்டரியில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில்தான் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமர ‘பேட் மேன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.
பேட் என்றால் என்ன என்பதே தெரியாத நிலையில் பெண்கள் இருப்பதாகவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அருணாச்சலம் முருகானந்தம் ஈடுபட்டார். மேலும், விலை உயர்வான பேட் விற்பதன் காரணத்தினாலேயே பல பெண்கள் இன்னும் நாப்கின்கள் உபயோகிக்காமல் இருப்பதாகவும், அவர்களின் இந்த துயரத்தை நீக்குவதற்காகவே விலை குறைவான ஆரோக்கியமாக நாப்கின்களை உருவாக்கத் தொடங்கியவர் இவர்.
மேலும், இந்த பணி, நாடு முழுவதும் செழிக்க வேண்டும், அனைத்து பெண்களும் இதனால் பயனடைய வேண்டும் என்று பல பெண்களை முன்னிருத்தி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கினார். சிறியதாக உருவாக்கிய இந்த தொழிற்சாலையில், நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கிப் போட்டார். பின்னர் பெண்களை அழைத்து, அவர்களுக்கு நாப்கின் தயாரிக்கும் பணியில் பயிற்சியளித்தார்.
இவ்வாறு சமூக ஆர்வத்துடன் அவர் ஆற்றிய செயலால், பல பெண்கள் இன்று பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்த அருணாச்சலம் புகழ் உலகம் முழுக்க கொடிக்கட்டி பரப்பது தமிழ் மக்களிடையே பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.