’இசையில் மட்டுமல்ல பாசத்திலும் அவர் ஞானி தான்’ : ரசிகருக்கு வீடியோ கால் செய்த இளையராஜா!

”எங்களை நேராக தொடர்புக்கொள்ள தேவையே இல்லை, ஆனாலும் அதைச் செய்தாரே!”

By: May 5, 2020, 1:08:17 PM

Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா மீது அளப்பரிய பற்று கொண்டவர் இசையமைப்பாளர் வர்ஷன். 25 ஆண்டு காலமாக இளையராஜாவின் தீவிர ரசிகராக பயணித்து வரும் இவர், அவருடைய ட்யூனில் அவரைப் போலவே பாடிய பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்திருக்கின்றன. அவருடைய மகன் லிடியன் நாதஸ்வரம், இளம் வயதிலேயே உலக அளவில் இசை சாதனை படைத்திருக்கிறார். அமெரிக்காவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, சாதனை படைத்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் பயின்ற லிடியனை பாராட்ட, இசைப்புயலே லிடியனை பார்க்க நேரில் வந்தார்.

முருகன் போஸில் ஷ்ருதி, உப்பு மூட்டை அதுல்யா: படத் தொகுப்பு

லிடியனும் அவரது அக்கா அம்ரிதாவும் இசையில் பல வித்தைகளைக் கற்று வைத்திருக்கிறார்கள். இதனை அவர்களது இசை வீடியோக்களில் காணலாம். இளையராஜா மீது அளவுக் கடந்த பிரியம் வைத்திருக்கும் வர்ஷனை, ஒருநாள் அவர் அழைத்துப் பாராட்ட மாட்டாரா என காத்திருந்தார்கள் நெட்டிசன்கள். தற்போது அந்த மேஜிக் நடந்துள்ளது.

ஆம்! வர்ஷனுக்கு வீடியோ கால் செய்த இளையராஜா, நலம் விசாரித்ததோடு, லிடியன் மற்றும் அம்ரிதாவை பாராட்டி இருக்கிறார். இதனை மகிழ்ச்சி பொங்க முகநூலில் பதிவிட்டுள்ளார் வர்ஷன். ”இசைஞானியிடமேயிருந்து வந்த அழைப்பு என்னை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது. நான் திகைத்துப்போனேன்! அவர் என் குழந்தைகளின் இசைப்பயணத்தைப் பாராட்டவே அழைத்தார். எங்களை நேராக தொடர்புக்கொள்ள தேவையே இல்லை, ஆனாலும் அதைச் செய்தாரே! அந்த அழைப்பில் தாய்போன்ற அவர் பாசத்தையும் குழந்தைப்போன்ற சிரிப்பையும் கண்டேன்!

கொரோனாவால் நிரம்பிய மருத்துவமனைகள்: பராமரிப்பு மையங்களுக்கு மாற்றப்படும் நோயாளிகள்

இசையால் மட்டுமா இவர் ஞானி? அல்ல! அதையும் தாண்டி பாசத்தைக் காட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரே என்பதை உளமார உணர்ந்தேன். எனது உள்ளச்சிறகை விரிக்கவும் பறக்கவும் செய்துவிட்டார் இசைஞானி. தரிசனம் கிடைத்தது, பயனும் அடைந்தது” என அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார் வர்ஷன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Isaignani ilaiyaraaja video call young music talent lydian nadhaswaram varshan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X