Advertisment

கொரோனாவால் நிரம்பிய மருத்துவமனைகள்: பராமரிப்பு மையங்களுக்கு மாற்றப்படும் நோயாளிகள்

பராமரிப்பு மையங்களில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், இரண்டு முறை சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus, corona updates live, covid 19 cases

சென்னையில் COVID-19 கேஸ்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால், நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, அறிகுறியற்ற மற்றும் நிலையான (ஸ்டேபிள்) நோயாளிகள், தனியார் கல்லூரிகளிலும், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு இடத்திற்கும் மாற்றப்பட்டு வருகிறார்கள்.

Advertisment

ஹந்த்வாரா தீவிரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட மூவர் வீர மரணம்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 73 நிலையான நோயாளிகள், ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள கல்லூரிக்கு, கோவிட் பராமரிப்புக்காக மாற்றப்பட்டதாக, மருத்துவக் கல்வி இயக்குநரும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியின் டீனுமான நாராயண பாபு தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளுக்கு 1,750 படுக்கைகள் உள்ளன. இதில் 1,200 படுக்கைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களில், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை குறைந்தது 500 ஆக உயர்ந்துள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் 500-ல், 270 படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையில் 400-ல் 190 படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. விரிவான ஆய்வை மேற்கொண்ட பின்னர், 55 வயதிற்கு உட்பட்ட அறிகுறிகுறி இல்லாத நோயாளிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்றுவோம்” என்றார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில், இருந்து சுமார் 60 சதவீத நிலையான நோயாளிகள், விரைவில் ‘பராமரிப்பு மையங்களுக்கு’ மாற்றப்படலாம் என்று டி.எம்.இ நாராயண பாபு தெரிவித்தார். ராயபுரம் மற்றும் திரு.வி.க நகரில் ஏற்பட்ட அதிக எண்ணிக்கையால், ராஜிவ் காந்தி மருத்துவமனை நிரம்பியுள்ளது. "RGGGH-ல் உள்ள 366 நிலையான நோயாளிகளில், நாங்கள் 100-150 ஐ வேறு இடத்திற்கு மாற்றலாம்" என்று அம்மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி கூறினார். நகரம் முழுவதும் 4,000 படுக்கைகளை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது, இதில் 600 சென்னை வர்த்தக மையத்திலும், மீதமுள்ளவை தனியார் கல்லூரிகளிலும் உள்ளன.

"அறிகுறியற்ற நோயாளிகளுக்கு அதிக சிகிச்சை தேவையில்லை. எனவே இந்த ஒவ்வொரு வசதியிலும் ஒரு மருத்துவர் மற்றும் போதுமான எண்ணிக்கையிலான செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் ”என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு முறை பரிசோதிக்கப்படுவார்கள், மேலும் அறிகுறிகள் இல்லாதவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்". பராமரிப்பு மையங்களில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், இரண்டு முறை சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று நோடல் அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Corona Updates Live : இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரிப்பு

இந்த நேரத்தில் மருத்துவமனையில் 320 நோயாளிகள் உள்ளனர் என்றும், அதில் 40 பேர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் பி.வசந்தமணி தெரிவித்தார். “அனைத்து மருத்துவ உபகரணங்கள், வெப்பமானிகள் மற்றும் பிபிஇ ஆகியவை சரி செய்த பின்னர் தான், மாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment