New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Jagame-Thanthiram-Dhanush.jpg)
Jagame Thanthiram, Dhanush
Jagame Thanthiram, Dhanush
Jagame Thanthiram : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்த படத்திற்கான தலைப்பை 1979-ஆம் ஆண்டு வெளியான ’நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அந்தப் படத்தில் “சம்போ சிவசம்போ” என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலின் தொடக்க வரிகள் தான் ’ஜகமே தந்திரம்’. இதைத் தான் தனுஷ் படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார் கார்த்திக்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி?. இதற்குமுன் இங்கு நடைபெற்ற விபத்துகள்
’ஜகமே தந்திரம்’ என்பது "இந்த பிரபஞ்சம் முரட்டுத்தனமானது" என்பதைக் குறிக்கிறது. நேற்று வெளியான இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் தலைப்புடன் சேர்ந்த்து தனுஷின் தோற்றமும் வெளியானது. அந்த வீடியோவில் ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோரின் கதாபாத்திரங்களும் காட்டப்பட்டன. அவர்கள் அனைவரும் ஆடம்பரமான உடைகளுடன், கையில் துப்பாக்கிகளுடன் வலம் வருகிறார்கள். தனுஷ் பாரம்பரிய வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
என்னுடைய 3 சகாக்களை இழந்து நிற்கின்றேன் ! ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தால் கமல் வேதனை
கார்த்திக் சுப்பராஜின் இந்த கேங்க்ஸ்டர் படத்தை YNOT ஸ்டுடியோவின் எஸ்.சசிகாந்த், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், தீபக் பரமேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘ஜகமே தந்திரம்’ மே 1, 2020 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.