Janhvi Kapoor as Gunjan Saxena the Kargil girl : நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனாலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது மிகவும் குறைவு தான். சில நேரங்களில் அவர்களின் பங்களிப்பு ஓவர்ஷேடோ செய்யப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அவர்களை பற்றிய வாழ்க்கையை படமாக எடுத்தால் மட்டுமே பலருக்கும் ஓ அப்படி ஒருத்தர் இருந்தாரோ என்ற எண்ணமே வரும். மேரி கோம், நீரஜா என்ற வரிசையில் தற்போது கார்கில் கேர்ள் என்ற படம் வெளியாக உள்ளது. ஆனால் திரையங்குகளில் இல்லை. நெட்ஃப்ளிக்ஸில்.
“Plane ladka udaye ya ladki, usse pilot hi kehte hain”- Gunjan Saxena – The Kargil Girl, arriving soon. #GunjanSaxenaOnNetflix#JanhviKapoor @DharmaMovies @ZeeStudios_ @karanjohar @apoorvamehta18 @TripathiiPankaj @Imangadbedi @ItsViineetKumar #ManavVij #SharanSharma pic.twitter.com/3blmvho4rG
— Netflix India (@NetflixIndia) June 9, 2020
யார் இந்த கார்கில் கேர்ள் என்ற கேள்வி எழுகிறதா? அப்படியென்றால் உங்களுக்கான பதில் இங்கே! இன்று இந்திய விமான படையில் 1600 பெண்கள் பணியாற்றி வருகிறனர். அவர்களின் ஒட்டுமொத்த கனவாக இருப்பவர் இந்த சக்சேனா தான். லக்னோவை சேர்ந்தவர் குஞ்சன் சக்சேனா. அவருடைய ஆசையெல்லாம் நன்றாக படித்து ஒரு விமானி ஆக வேண்டும் என்பது தான். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவரின் சூழலில் இருக்கும் பெண்கள் கார் ஓட்டுவதே மிகப்பெரிய விசயம். அவர் வெளியுலகத்தை நினைத்து பெரிதும் கவலைப்படவில்லை. அவரை நம்ப அவருடைய அப்பா இருந்தார்.
மேலும் படிக்க : அதிக வசூல் செய்த 5 தமிழ் படங்கள்: ஓடிடி தளங்களில் தாராளமாகப் பார்க்கலாம்!
1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் சீட்டா (Cheetah) விமானத்தை ஓட்டியவர் குஞ்சன் சக்சேனா. போர்களத்தில் விமானம் ஓட்டிய முதல் இந்திய விமானி சக்சேனா ஆவார். அவருடைய வாழ்க்கையை தற்போது நெட்ஃப்ளிக்ஸ் படமாக வெளியிட உள்ளது. இந்த படத்தில் நடிப்படதற்காக ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil