பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு நேர்காணலில், தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், மேலும் தான் இணைந்து நடிக்க விரும்பும் தென்னக நடிகர்கள் பற்றியும் கூறினார். விஜய் சேதுபதி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஜான்வி தெரிவித்ததோடு, நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.
கலாட்டா பிளஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜான்வி, “விஜய் சேதுபதி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் ரவுடி தான் படத்தை 100வது முறையாகப் பார்த்த பிறகு, யாரோ ஒருவர் விஜய் சேதுபதி நம்பரை வைத்திருப்பதை தெரிந்து அதனைப் பெற்று, அவருக்கு போன் செய்தேன். ‘சார் நான் உங்களின் பெரிய ரசிகை, நீங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான ஆடிஷனில் நான் கலந்துக் கொள்வேன், நான் உங்களுடன் நடிக்க விரும்புகிறேன்’ என்று கூறினேன்.
இதையும் படியுங்கள்: ரகசியமாக நடந்த தளபதி 67 பட பூஜை : போட்டோ எங்கே? ரசிகர்கள் சோகம்
விஜய்சேதுபதி அதற்கு என்ன சொன்னார் என்பது குறித்து ஜான்வியிடம் கேட்டபோது, “அவர் ‘ஐயோ, ஐயோ’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் மறுத்தாரா அல்லது வெட்கப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஆர்வமாக இருந்ததால் அவர் ஆச்சரியப்பட்டார், அவர் அதிர்ச்சியடைந்தார் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.
ஜூனியர் என்.டி.ஆர் பற்றி பேசுகையில், அவரைப் பற்றி தொடர்ந்து பேசினால், அவர் தடை உத்தரவு பிறப்பிக்கக்கூடும் என்று ஜான்வி நகைச்சுவையாக கூறினார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் அவர் திரையில் வரும்போது ஒரு சக்தியைப் போல ஒரு ஜோஷ் இருப்பதாக நான் நினைக்கிறேன். இது அவருடைய மதிப்பா, அவரது டைமிங்கா, அவரது ஈர்க்கும் திறனா மற்றும் வசீகரமா என்று எனக்குத் தெரியவில்லை, நான் அவரை அப்படி ரசிக்கிறேன். நான் ஒரு பின் தொடர்பவளைப் (ஸ்டாக்கர்) போல் அவரை ஃபாலோ செய்கிறேன்,” என்று கூறினார்.
ஜான்வி சமீபத்தில் மிலி படத்தில் நடித்தார், இது ஹெலன் என்ற மலையாளப் படத்தின் ஹிந்தி ரீமேக். ஜான்வி அடுத்தடுத்து சுவாரஸ்யமான படங்களில் நடித்து வருகிறார். அவர் வருண் தவானுடன் பவால் மற்றும் ராஜ்குமார் ராவுடன் திரு மற்றும் திருமதி மஹி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil