’கங்கனாவை தவிர வேறு யாராலும் ஜெயலலிதாவாக சிறப்பாக நடிக்க முடியாது’ – ஏ.எல்.விஜய்

திரையில் பார்ப்பதை மக்கள் எளிதாக கனெக்ட் செய்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை தெரிந்திருக்கும்.

By: Updated: February 24, 2020, 05:01:41 PM

எஸ். சுபகீர்த்தனா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறான ’தலைவி’ படத்தை தனது தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான படமாக கருதுகிறார் இயக்குநர் விஜய்.”இது அழுத்தமாக இல்லை, ஆனால் பெரிய பொறுப்பாக நான் கருதுகிறேன்,” என்றுக் கூறும் விஜய் புன்னகைக்கிறார். தொடர்ந்த அவர், ”இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படும் தலைவி, 1965 மற்றும் 1991-க்கு இடையிலான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருக்கும். எங்கள் படத்தை முடிந்தவரை உண்மையானதாகக் காட்ட முயல்கிறோம்” என்றார்.

மேலும் தொடர்ந்த இந்த சுவாரஸ்ய உரையாடலை இங்கே பதிவிடுகிறோம்.

‘அம்மா என்றால் அன்பு’ ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் கற்பனையைக் கலக்க முடியாது, ‘தலைவி’ பற்றிய உங்களின் அணுகுமுறை எப்படி இருந்தது? 

எங்கள் வாழ்க்கை வரலாறு ஜெயலலிதாவை கொண்டாடும். அதே நேரத்தில், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல சினிமா அனுபவத்தையும் நிச்சயம் தரும். ஜெயலலிதா ஒரு போர்வீரர், அவரது கதை சொல்லப்பட வேண்டியது. ’பாகுபாலி’ மற்றும் ’மணிகர்னிகா’ ஆகியப் படங்களின் எழுத்தாளர்  கே.வி.விஜயேந்திர பிரசாத் சார் தான் இந்தப் படத்தையும் எழுதியுள்ளார்.  எங்களுக்கு ‘க்ரீன் சிக்னல்’ கொடுத்த, ஜெயலலிதா மேடத்தின் அண்ணன் மகன் ஜெ. தீபக்கிற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மீண்டும் நீங்கள் உருவாக்க விரும்பிய ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பகுதிகளை எப்படி தேர்வு செய்தீர்கள்?

’தலைவி’ திரைப்படம் ஜெயலலிதாவின் கொண்டாட்டம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகளைக் கூறும். நடிகை, அரசியல்வாதி என இரண்டும் அதில் இருக்கும். நிச்சயமாக, இரண்டரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் காட்ட முடியாது. குறிப்பிடத்தக்கவற்றை நாங்கள் திரையில் காட்ட முனைந்திருக்கிறோம். உதாரணமாக, 1980-ம் ஆண்டில், எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வரானபோது, மவுண்ட் ரோட்டில் ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒரு லட்சம் மக்கள் கலந்துக் கொண்டார்கள். இரண்டு எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பாடல்களைத் தவிர, இதை தலைவியில் மீண்டும் உருவாக்கியுள்ளோம். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதல் சோபன் பாபு வரை நம் வாழ்க்கை வரலாற்றில் எல்லோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியை பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது

நன்றி! புதிய பூமி (1968) படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை’ பாடலை மீண்டும் உருவாக்கலாம் என்ற யோசனை இருந்தது. எம்.ஜி.ஆர்-நடித்த (கருப்பு – வெள்ளை நிறத்தில்) தோற்றத்தையும் ஃபீலையும் அப்படியே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆடை முதல் ஹேர் ஸ்டைல் வரை அரவிந்த் சாமிக்கு கச்சிதமாக கைகொடுத்தன. இப்படி இந்தப்படம் இன்னும் பல ஆச்சரியங்களை கொண்டுள்ளது. (புன்னகைக்கிறார்)

AL Vijay Thalaivi biopic ஏ.எல்.விஜய்

கெளதம் மேனனின் ‘குயின்’ வெப் சிரீஸை பார்த்தீர்களா? 

நான் மூன்று அத்தியாயங்களைப் பார்த்தேன். இந்திரஜித் சுகுமாரன் நடித்த மற்றொரு நிகழ்வு. கெளதம் மேனனின் நேர்காணல்களில் இருந்து, அந்த வலைத் தொடர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றிய கற்பனையான படம் என்று நான் புரிந்துக் கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நான் அதை முழுமையாகப் பார்க்க விரும்பவில்லை. ’எங்க அதோட இன்ஃப்ளூயன்ஸ் வந்துடுமோன்னு பயம்!’ (சிரிக்கிறார்). அனிகா சுரேந்திரனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எல்லா வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் குறிப்பிட்டவர்களைப் பற்றி உண்மையை சொல்வதாக உறுதியளிக்கின்றன

நோக்கம் தான் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். மேலும், இந்தப் படத்தில், நாங்கள் எங்கள் 100 சதவீதத்தை சிறந்த முறையில் வழங்கியுள்ளோம். தயாரிப்பாளர்கள் கண்டெண்டை நம்புகிறார்கள், ஒரு திரைப்பட இயக்குநராக நானும் அதையே நினைக்கிறேன். பொதுவாக, எனக்கு ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்லை. ஆனால் சில காரணங்களால், தலைவி ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகிறேன். ஏனென்றால் திரையில் பார்ப்பதை மக்கள் எளிதாக கனெக்ட் செய்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை தெரிந்திருக்கும். ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்பட்டபின் அவர் வலுவாக எழுந்து நின்றார். சுவாரஸ்யத்திற்காக நாங்கள் உண்மையை மாற்றவில்லை.

ஆனால், வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நன்கு அறியப்பட்ட நபர்களை மகிமைப்படுத்துகிறார்கள்

ஜெயலலிதா போன்ற ஒரு லெஜண்டை மகிமைப்படுத்த தேவையில்லை. ஒரு பெண்ணாக, அவர் மிகவும் வேதனைகளை அனுபவித்தார். அதே நேரத்தில்,  தனது வாழ்க்கையை மிகவும் கண்ணியத்துடனும் வாழ்ந்தார்.

மாற்றுக் கட்சியினரும் பார்த்து வியந்த இரும்புப் பெண்மணி ஜெயலலிதா

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க முடியுமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் கூட விமர்சனங்கள் எழுந்ததே

இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு தரக் கூடாது என நினைக்கிறேன். ஜெயலலிதாவாக நடிப்பதற்கு, கங்கனா ரனாவத்தை தவிர, வேறு யாராலும் சிறப்பாக பொருந்த முடியாது என்று நினைக்கிறேன். அவர் தலைவிக்காக 10 கிலோ வெயிட் போட்டார். அவர் இடத்தில் வேறு ஒருவர் இதைச் செய்வாரா எனத் தெரியவில்லை. உணர்வுப்பூர்வமான காட்சிகள் அல்லது பரதநாட்டியம் என எதையும் சிறப்பாக உள்வாங்கி நடிக்கிறார். அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகையை நான் பார்த்ததில்லை. ’அவுங்க பெண் அமீர்கான்!’ (சிரிக்கிறார்). பார்வையாளர்கள் திறந்த மனதுடன் வந்து கங்கனாவிடம் ஜெயலலிதாவைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிமி அகர்வாலுடனான நேர்காணலின் போது, ஜெயலலிதா தனது வாழ்க்கை ஒரு படமாக உருவாவதை விரும்பவில்லை என்று கூறியிருந்தார்

இது கொஞ்சம் கடினமான கேள்வி. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Jayalalithaa biopic thalaivi kangana ranaut al vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X