’பில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தேன்’: ஜெயலலிதா கை பட எழுதிய கடிதம்

”கடவுளின் கிருபையால், நான் நிதி ரீதியாக மிகவும் நன்றாக இருக்கிறேன். மீதமுள்ள நாட்களுக்கு என்னால் ஒரு ராணியைப் போல வாழ முடியும்”

Jayalalithaa rejected Rajinikanth's Billa movie chance
Jayalalithaa rejected Rajinikanth's Billa movie chance

சினிமா, அரசியல் என இரண்டிலுமே வெற்றி பெற்று திகழ்ந்தார் ஜெயலலிதா. அரசியல் பிரவேசத்தைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகினார். இருப்பினும், 1980-களில் பத்திரிக்கை ஒன்றில், ஜெயலலிதா குறித்து செய்தி ஒன்று வெளியானது. அதில், ‘பட வாய்ப்புகள் இல்லாததால் தான் ஜெயலலிதா அரசியலில் குதித்து விட்டார்’ என எழுதப்பட்டிருந்தது. சினிமா வாய்ப்புகளைப் பெறுவதில் ஜெயலலிதா மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருப்பதி லட்டுகள் இனி சென்னையிலும் : தேவஸ்தானம் அறிவிப்பு

இந்த செய்திக்கு பதிலளித்த குறிப்பிட்ட பத்திரிக்கையின் எடிட்டருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார் ஜெயலலிதா. அதில், ”வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகவில்லை எனவும், தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தான் சினிமாவை விட்டு விலகியதாகவும்” குறிப்பிட்டிருந்தார். அதோடு, பில்லா படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க தயாரிப்பாளர் பாலாஜி முதலில் தன்னை அணுகியதாகவும், அவர் நிராகரித்த பின்னர் தான் அந்த வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு வழங்கப்பட்டதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ’அத்தகைய திகைப்பூட்டும் வாய்ப்பை நான் நிராகரிக்கும் போதே, நான் திரும்பி வந்து சினிமாவில் நடிப்பதற்காக போராடவில்லை என்பதை இது உறுதியாக நிரூபிக்கவில்லையா? கடவுளின் கிருபையால், நான் நிதி ரீதியாக மிகவும் நன்றாக இருக்கிறேன். மீதமுள்ள நாட்களுக்கு என்னால் ஒரு ராணியைப் போல வாழ முடியும் …’ எனவும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். ஜெயலலிதா கை பட எழுதிய அந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஊரடங்கால் படபிடிப்பு இல்லை: பணத் தேவைக்காக பழம் விற்கும் பாலிவுட் நடிகர்

ரஜினி – ஸ்ரீபிரியா நடிப்பில் கடத்தல் மன்னனின் கதையாக உருவான ‘பில்லா’ திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jayalalithaa rejected rajinikanths billa movie chance

Next Story
ஊரடங்கால் படபிடிப்பு இல்லை: பணத் தேவைக்காக பழம் விற்கும் பாலிவுட் நடிகர்Bollywood actor Solanki Divakar Sells Fruits, corona lockdown
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express