/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1596.jpg)
jiiva starrer gypsy movie released tamil rockers raju murugan
Gypsy Movie Leaked in Tamil Rockers: ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஜிப்ஸி. விமர்சன ரீதியில் ஓரளவுக்கு நல்ல ரீச் பெற்றுள்ளது. நீண்ட காலமாக தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ஜீவாவுக்கு இப்படம் ஒரு பிரேக்காக இருக்கும் என்பது படம் பார்த்த பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
மீண்டும் அண்ணன் - தம்பி கூட்டணி; அடுத்த ஹிட் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ரெடியா?
ஜோக்கர் படத்திற்கு பிறகு ராஜு முருகன் இயக்கிய படம் என்பதாலேயே, இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கருத்தியல் ரீதியாக படம் சினிமா விமர்சகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டாலும், அட்வைஸ் பாணியிலான காட்சிகள் அதுவே ஓவர் டோஸாக போனதால், சாமானிய ரசிகர்களை படம் பெரிதாக கவரவில்லை.
சமூகத்தில் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை தத்ரூபமாக காட்சி அமைத்துள்ளார் இயக்குனர் ராஜு முருகன். கலவரத்தை பற்றியும், அதனால் பாதிப்படையும் மக்கள் எந்த வகையில் வாழ்க்கையில் துன்பப்படுகிறார்கள் என்பதையும் எடுத்து காட்டியுள்ளனர்.
விஜயின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு; டுவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்
இந்நிலையில், ஜிப்ஸி படத்தை தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத் தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஒரு தரமான படத்தை, இதுபோன்று திருட்டுத் தன்மாக வெளியிட்டு சிதைக்கிறார்களே என்பதே சினிமா ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.