‘ஜோ’ம்ராஜ்யம்: தமிழ் சினிமாவின் புதிய அரசி!

Jyothika movies: ஜோதிகாவின் இந்த வெற்றிகள் அவருக்கு தமிழ் சினிமாவின் புதிய அரசி என முடிசூட்டியிருக்கிறது. தொடரட்டும் ஜோதிகாவின் ‘ஜோ’(சா)ம்ராஜ்யம்.

By: Updated: August 2, 2019, 08:02:09 PM

Jyothika In Tamil Cinema: தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகர், தனது மகன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வருகிற வரைக்கும் அவர் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், ஒரு நட்சத்திர நடிகை சினிமாவில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வெற்றிகரமான நடிகையாக வலம் வருவது என்பது தமிழ் சினிமா துறை காணாத ஒன்று. இது ஒன்றே தமிழ் சினிமா துறை எத்தகைய ஆணாதிக்கத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

Jackpot Review : ஸ்கிரீனில் தெறிக்க விட்டுடாங்க தலைவி ஜோ! ஜாக்பாட் விமர்சனம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் நிலவும் ஆணாதிக்கத்தை தகர்க்கும் வகையில் நடிகைகள் எழுந்து வந்திருக்கிறார்கள். திரிஷா, நயன்தாரா, ஜோதிகா தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகிகளாக நடித்து தங்கள் திறமையை நிரூபித்துவருகின்றனர். அதிலும், நயன்தாரா கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. அவருடைய படங்கள் ரசிகர்களிடம் நட்சத்திர நடிகர்களின் படத்துக்கு இணையான வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த வரிசையில் ஜோதிகாவும் இணைந்துள்ளார். ஆனால், ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னுதாரணம் இல்லாத ஒரு நடிகையாக பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார்.

ஜாக்பாட் பட அனுபவம் எப்படி? – மனம் திறக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். ஆனந்த்குமார்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக கதாநாயகியாக நடித்துவந்த நடிகைகள்,  திருமணம் செய்துகொண்ட பிறகு அவர்களை கதாநாயகிகளாக வைத்து படம் இயக்குவதற்கும் படம் தயாரிப்பதற்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முன்வராத நிலை இருந்தது. அப்படியே ஏதேனும் ஒரிரு படங்கள் வெளிவந்தாலும் அவை வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை. அப்படியே முதல் படம் வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி தொடர்வதில்லை. அதனால், விரைவில் அவர்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள்.

IET Exclusive : ராட்சசி மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்ல – ஜோவின் ஓப்பன் டாக்!

தமிழ் சினிமாவின் இந்த போக்கில், சினிமா ரசிகர்களின் தலைமுறை மாற்றமும், புதிய தொழில்நுட்பமும், புதிய அலை இயக்குனர்களின் வருகையும் சினிமா துறையின் சிந்தனை முறையை மாற்றியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் பல இளம் இயக்குனர்களின் புதிய முயற்சிகளால் தமிழ் சினிமாவின் முகம் மாறியிருக்கிறது. அந்த வகையில்தான், கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களை உருவாக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். இப்போது அத்தகைய படங்களுக்கான சந்தையையும் உறுதி செய்துள்ளனர்.

இந்த பின்னணியில்தான், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா நடிகர் சூரியாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் தமிழ் சினிமாவில் ஜோதிகாவின் இரண்டாம் வருகை நடந்துள்ளது. அதுவும் வெற்றிகரமான வருகையாகவும் நம்பிக்கை அளிக்கும்படியாகவும் உள்ளது. அவர் நடித்த 36 வயதினிலே, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்கள் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் சினிமா துறையில் திருமணம் செய்துகொண்ட பின் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர், ஒரு நடிகை கதாநாயகியாக அதுவும் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்து வெற்றி பெறுவது என்பது இதுதான் முதல்.

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது, கழுகு 2: மிரட்டலில் ஜாக்பாட்

ஜோதிகாவின் இந்த வெற்றிக்கு அவர் தேர்ந்தெடுத்த கதை, கதாபாத்திரம், படம் பேசும் விஷயம் ஆகியவை அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இது தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள ஒரு ஆரோக்கியமான போக்கு. ஆனால், இதே பாதையில் போனாலும் ரசிகர்கள் சலிப்படைந்துவிடுவார்கள். இதில், மாற்றத்தையும் கொடுக்க வெண்டியுள்ளது. அதனால், ஜோதிகா இந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறார் என்பதை அனைவரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், ஜோதிகாவின் இந்த இரண்டாம் வருகையின் வெற்றி தமிழ் சினிமாவில் முன்மாதிரி இல்லாத ஒரு முன் உதாரணம் என்று துணிந்து கூறலாம். இந்த வெற்றிகள் அவருக்கு தமிழ் சினிமாவின் புதிய அரசி என முடிசூட்டியிருக்கிறது. தொடரட்டும் ஜோதிகாவின் ‘ஜோ’(சா)ம்ராஜ்யம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Jyothika in tamil cinema jackpot movie jyothika movies jackpot tamil movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X