Jyothika talks about Jackpot Movie : ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் நடிகை ஜோதிகா. சமீபத்தில் வெளியான ராட்சசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெள்ளிக்கிழமை ஜாக்பாட் திரைப்படம் வெளியாகியுள்ளது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்நிலையில் அதை முன்னிட்டு படம் பற்றியும் பொதுவான கேள்விகளுக்கும் சுவாரசியமாக பதிலளித்தார் ஜோதிகா.
நீங்க சூர்யா இரண்டு பேருமே சூட்டிங் போற சமயத்தில் உங்க குழந்தைகங்க யாரை மிஸ் பண்ணுவாங்க?
ரெண்டு பேரைமே மிஸ் பண்ணுவாங்க. பசங்களுக்கு சில விசயத்திற்கு அப்பா வேணும். சில விசயங்களுக்கு அம்மா வேணும்.
ஜாக்பாட் அக்ஷயா பற்றி..?
அக்ஷயா ரொம்ப போல்டான லேடி…இது காமெடி படம் போல தெரியும். ஆனா காமெடிக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. இந்தப்படத்தில் கல்யாண் சாரின் கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடித்தது. ஒரு பெரிய ஹீரோ படத்தில் அந்த ஹீரோவுக்கு என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் இப்படத்திலும் நிறைய இருக்கு. ஹீரோவுக்கு ஈக்குவலா ஒரு ஹீரோயினை திங் பண்ணி ரைட்டிங் பண்ண கல்யாணின் அந்த தாட்ஸ் எனக்குப் பிடித்தது.
மேலும் கல்யாண் மேல எனக்குப் பெரிய ஆச்சர்யம் என்னன்னா 24 டேய்ஸ்ல படத்தை முடிச்சிட்டார். ஸ்பாட்டுக்குப் போனா எல்லாப்பக்கமும் கேமரா வச்சிருப்பார்.
இப்போதுள்ள புதிய இயக்குநர்கள் எப்படி?
பிரில்லியண்டா யோசிக்கிறாங்க. நான் பொதுவா கதையை மூன்று மாதத்திற்கு வாங்கி மனப்பாடம் பண்ணுவேன். இது பாலா சாரிடம் படித்த பாடம்.
உங்க பசங்களுக்கு என்ன ராட்சசி மாதிரி படங்கள்ல வர்ற ஜோதிகாவைப் பிடிக்குமா?
பசங்களுக்கு ஜாக்பாட் ஜோதிகாவை தான் பிடிக்குதுனு நினைக்கிறேன். என் படங்கள் பற்றி என் பையனை விட பொண்ணு தான் நிறைய பேசுவாங்க.
ஜாக்பாட் கதையைப் பற்றி?
அதை டீட்டெயிலா சொல்ல முடியாது. ஒரு லைனை மட்டும் வேணா சொல்லலாம்.
நம்மை கையில் காசு நிறைய வந்தா நிச்சயமா அதைக் திருப்பி மத்தவங்களுக்கும் கொடுக்கணும். அதுதான் படத்தின் முக்கியமான பாயிண்ட். ஏன்னா வாழ்க்கை சைக்கிள் மாதிரி இல்லியா?
பயோபிக் படத்தில் நடிப்பீர்களா?
அப்படி யாரும் மனதில் . இதுவரைக்கும் அந்த ஐடியாவும் இல்லை. மற்றபடி பல இளம் இயக்குநர்கள் எனக்காகவே சில கதைகளை எழுதுறாங்க அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. வொமன்ஸ் பத்தி இன்றைய இளைஞர்கள் ரைட்டப் பண்றது உண்மையாவே அமேசிங்கான விசயம். ஆனால் ஆடியன்ஸ் ஹீரோயின் படத்திற்கு பெரிய ஓபனிங் கொடுக்க மாட்டேன்றாங்க. அதுதான் கஷ்டமா இருக்கு.
பெரிய ஹீரோக்கள் படம்னா போறாங்க. பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சண்டைக் காட்சிகளுக்கு 5 நாள் எடுத்துக்கிறாங்க. அந்தப் படங்களின் வியாபாரம் அப்படி. அதே ஓபனிங் இருந்தால் ஹீரோயின் படங்களிலும் அது சாத்தியமாகும். அதேபோல் ஏ.ஆர் ரகுமான் பெண்கள் படத்திற்கும் இசை அமைக்கணும். அப்பதான் எல்லாருக்கும் அந்த தாட்ஸ் வரும்.
தயாரிப்பாளர் சூர்யா எப்படி?
மத்த கம்பெனிகளை விட இங்க தாராளமா செலவு பண்ணுவாங்க. எனக்கு எங்க கம்பெனி செம்ம கம்ஃபோர்டா இருக்கும். நான் லீட் கேரக்டர்ல நடிச்ச படத்திற்கு முதன்முறையா 100 டான்ஸர் யூஸ் பண்ணிருக்கது இந்தப்படத்துக்குத் தான். மேலும் சனி ஞாயிறு லீவு எடுத்துப்பேன். அந்த சவுகரியம்லாம் தயாரிப்பாளர் சூர்யாவிடம் தான் கிடைக்கும்.
ராட்சசி படத்திற்கு நல்ல வரபேற்பு கிடைத்துள்ளது. அதனால் ஜாக்பாட்டில் உங்கள் சம்பளத்தை ஏற்றியுள்ளீர்கள்? சூர்யா சம்பளம் எப்படி கொடுத்தார்?
எனக்கு சம்பளம் அதிகம் தான். .எல்லா சம்பளமும் ஒரே வீட்டுக்கு தானே வருது. நான் என்ன தனியாவா எடுக்கப் போறேன்.
ராட்சசி படத்திற்கு எதிர்ப்பு வரவேற்பு ரெண்டுமே வந்ததே?
நிறைய பேர் ட்ரீம் வாரியருக்கு கடிதம் அனுப்பினார்கள். அந்தக் கடிதங்களை நானும் பார்த்தேன். உண்மையைத் தான் படத்தில் காட்டியுள்ளீர்கள் என்று பலரும் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்ல. பயம் இருந்தா படமே நடிக்க மாட்டேனே!
ராட்சசிக்கு வந்த முக்கியமான பாராட்டு?
சிலர் ஈரோட்டுல ஒரு கவர்மெண்ட் ஸ்கூலுக்குப் பஸ் கொடுத்திருக்காங்க. சிலபேர் ஸ்கூலுக்குப் பண்ட் கொடுத்திருக்காங்க. இதுதான் பெரிய பாராட்டு.
நீங்க ஏன் ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல ஒருநாள் டீச்சரா இருக்க கூடாது?
அப்படி எல்லாம் போக முடியாது. அதுக்கு முக்கியமா டிகிரி வேணும்
படம் இயக்குவீங்களா?
நான் படம் இயக்க மாட்டேன். எனக்கு அந்தளவுக்கு நாலேஜ் இருக்கான்னு தெரியல. என் லட்சியம் என்னன்னா ஹீரோ படம் அளவுக்கு என் படம் வசூல் பண்ணணும். நூறு கோடி வசூல் பண்ணணும்
உங்களின் இந்த வெற்றிகரமான பயணத்திற்கு காரணம்?
என்னைவிட பெரிய நடிகைகள் இருந்தாலும்..சூர்யா இருந்ததால் தான் எனக்கு இப்படியான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 36 வயதினிலே படம் பண்ணிய பிறகு இரண்டு வருசம் எனக்குப் படம் வரல. மறுபடியும் மகளிர் மட்டும் படத்தை சூர்யா தயாரிச்சார். என்னைப் பொறுத்தவரை நல்லபடம் பண்ணணும். ஏன்னா எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. நல்லபடங்கள் பண்ணுவேன்… ஏன்னா எனக்கு 2டி இருக்கு..சூர்யா இருக்கார்
நீங்க ஏன் சோசியல் மீடியாவுக்கு வர்றதில்ல?
அதில் எதாவது நெகட்டிவிட்டிஸ் பார்த்தேம்னா அது மனசைக் காயப்படுத்துது. அதான்.
யார்கூட நடிக்கணும்னு ஆசை?
சிம்ரன் கூட நடிக்கணும்னு ஆசை.
லைப் கேரக்டர்?
அப்படி எந்த யோசனையும் இல்லை. எனக்கு நிறைய படங்கள் நானே எதிர்பாராமல் கிடைக்குது..இன்னும் சில நல்ல படங்கள் பண்ண இருக்கேன்.