scorecardresearch

Jackpot Review : ஸ்கிரீனில் தெறிக்க விட்டுடாங்க தலைவி ஜோ! ஜாக்பாட் விமர்சனம்.

Jackpot Review In Tamil: ஜோதிகாவின் ஜாக்பாட் திரைப்படம் அவரின் வெற்றி படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதா?

Jackpot Review Jackpot full movie Review
Jackpot Review Jackpot full movie Review

Jackpot Full movie Review: ஜாக்பாட் படத்தின் விமர்சனத்தை ஒரே வரியில் சொன்னால் ”குஷி ஜோதிகா இஸ் பேக்” அதே துருதுருப்பு எக்ஸ்பிரஷ்ன்கள், ஸ்கீரின் பிரெசண்ட். கலகலப்பான ஜோதிகா- ரேவதி காம்போ காமெடி சரவெடியை தெறிக்க விட்டுள்ளனர்.

‘ஜோ’ம்ராஜ்யம்: தமிழ் சினிமாவின் புதிய அரசி!

திருமணத்திற்குப் பின் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி என தொடர்ந்து வித்யாசமான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா ராட்சசி படத்திற்கு பிறகு தேர்ந்தெடுத்த படம் தான் ஜாக்பாட்.

படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பெண்களின் சுதந்திரம் சமூக அக்கறை என ஹீரோவுக்கு நிகராக தன்னை வெளிப்படுத்தி மாஸ் காட்டி வந்த ஜோதிகா தற்போது ஆக்ஷன் ஹீரோயினாக “ஜாக்பாட்” படத்தில் நடித்துள்ளார்.

ராட்சசி மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்ல – ஜோவின் ஓப்பன் டாக்!

ஹீரோக்களை மையப்படுத்தி வரும் படங்களில் ஹீரோயின்கள் பெர்ஃபார்ம் செய்வதற்கு வாய்ப்பு ரொம்பவே குறைவாக இருக்கும். சில படங்களில் கிளாமருக்கு மட்டுமே நடிகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி, ஹீரோயின்களை மையமாக வைத்துத் தயாராகும் படங்கள் நிறைய வரத் தொடங்கி, அது ஒரு முக்கியமான ஜானராகவும் மாறிவிட்டது. இந்த ஜானரில் நடிகை ஜோதிகா அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம், குழந்தைகள் எனப் பிஸியாக இருந்த ஜோதிகாவின் ரீஎன்ட்ரி, சூப்பர் கம்பேக் என்றே சொல்லலாம்.அந்த வகையில் தற்போது நடிகை ஜோதிகாவின் ஜாக்பாட் திரைப்படம் அவரின் வெற்றி படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதா என்பதை பார்க்கலாம் வாங்க!

முதல் நாள் படத்தை ஜாக்பாட் படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்துக்கள் இதோ..

காலை தொடர்ந்து, மதிய காட்சிகளும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக சென்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து, ஐஇ தமிழுடன் இணைந்து ஜாக்பாட் விமர்சனத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Jackpot review jackpot full movie review jyothika