Advertisment

Kaala Movie Release Live Updates: பலத்த பாதுகாப்புடன் பெங்களூருவில் காலா ரிலீஸ்

Kaala Movie Review and Release Live Updates: ரஜினிகாந்த்-ன் காலா ரிலீஸ் செய்திகள் உடனுக்குடன் இங்கே:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaala movie review, காலா, ரஜினிகாந்த்

Kaala Movie Release Live:

Kaala Movie Review and Release Live Updates: ரஜினிகாந்த்-ன் காலா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியது.

Advertisment

காலா, ரஜினிகாந்த் ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பில் உள்ள படம்! மும்பை, தாராவியில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கேங்க்ஸ்டர் படம்! இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் படம் தயாராகியிருக்கிறது.

ரஜினிகாந்த்-ம் மருமகனும், நடிகருமான தனுஷு-ன் உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பு! ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் அரங்கேறவிருக்கும் வேளையில் இந்தப் படம் அவரது ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Kaala Movie Review and Release Live Updates: ரஜினிகாந்த்-ன் காலா திரைப்படம் ரிவ்வியூ, ரிலீஸ் தொடர்பான லைவ் செய்திகள் இங்கே:

4:00 PM : காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் சென்னையில் அளித்த ஒரு பேட்டியில், ‘ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன்; மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன்’ என கூறியிருக்கிறார்.

3:30 PM: கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலா ரிலீஸ் ஆனது. பெங்களூரு மந்திர் மால் முன்பு காலாவுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர்.

Kaala Movie Release Kaala Movie Release Live Updates: பெங்களூருவில் காலா ரிலீஸ் ஆன தியேட்டர் முன்பு போராட்டம்

3:00 PM : பெங்களூருவில் பலத்த பாதுகாப்புடன் காலா திரையிடப்படும் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. இன்று மாலை காட்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

2:00 PM : காலா முதல் நாள் கலெக்‌ஷன் இந்தியா முழுவதும் 25 முதல் 30 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. சினிமா வர்த்தக நிலவரத்தை அலசுபவரான கிரிஷ் ஜோகர் இந்த தகவலை கூறுகிறார்.

1:00 PM : காலா அதிகாரபூர்வமற்ற தடை காரணமாக இன்று மதியம் வரை பெங்களூருவில் காலா ரிலீஸ் ஆகவில்லை. ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசி அந்த மாநில முதல்வர் குமாரசாமிக்கும், கன்னட மக்களுக்கும் வேண்டுகோள் வைத்தும் பலன் கிடைக்கவில்லை. பெல்லாரியில் மட்டும் ஒரு தியேட்டரில் காலா திரையிடப்பட்டது.

11:15 AM : சென்னையில் காலா பட இயக்குநர் பா.ரஞ்சித் அளித்த பேட்டியில், ‘ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம் இது. காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

10:35 AM : ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவிடம், காலா படம் இணையதளங்களில் வெளியானது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘சமூக வலைத்தளங்களை அனைவரும் முறையாக பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

10.00 AM : காலா குறித்து ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியியில் பெரும் வரவேற்பு வெளிப்பட்டு வருகிறது. அதேசமயம் ரஜினிகாந்தை விமர்சனம் செய்கிறவர்கள், ‘காலாவதியான காலா’ என ஹேஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் கலாய்த்து வருகிறார்கள்.

9:30 AM : மும்பையில் காலா படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி போல கொண்டாடினர்.

To Read, Kaala Movie Review in Tamil : காலா விமர்சனம் - பல அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ரஜினி படம்! Click Here

9:00 AM : காலா ரிலீஸை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ், ‘வா தலைவா’ என ட்வீட் செய்திருக்கிறார்.

8:45 AM : காலா, பலத்த பாதுகாப்புடன் கர்நாடகாவிலும் திரையிடப்படுகிறது. பெங்களூருவில் காலா திரையிடப்படும் மல்டிபிளெக்ஸ்கள் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

8:30 AM : காலா பற்றி ட்விட்டரில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா கருத்து

8:00 AM : சென்னை, பரங்கிமலை ஜோதி தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் செம மாஸ்!

7:30 AM: ரஜினிகாந்தின் ஜப்பான் ரசிகர், ரசிகைகளும் காலாவை பார்க்க சென்னை வந்திருக்கிறார்கள்.

7:00 AM: காலா குறித்து சில முதல்கட்ட ரெஸ்பான்ஸ்:

ஹரிசரன் புடிபெட்டி: முதல் பாதியில் ரஜினிகாந்துக்கு பக்காவான அவரது ஃபார்முலா படமாக பொருந்துகிறது. சில காட்சிகளில் அவரது கரிஷ்மா, பார்க்க மிக அரிதான காட்சிகளாக இருக்கின்றன. கதையைப் பொறுத்தவரை பா.ரஞ்சித் நல்ல தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

கவுஷிக் : காலாவுக்கும், ஸரினாவுக்கும் இடையிலான ஃப்ளாஷ்பேக் காட்சிகள், ரஜினி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கிறது. ரஜினியின் ஸ்டைலும், கரிஷ்மாவும் பிரமாதம்!

சதிஷ்குமார்: ஹூமா குரேஷி அறிமுகத்திற்கு பிறகு காலா வேகம் எடுக்கிறது. மாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட நடிகர் ரஜினிகாந்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் பா.ரஞ்சித்.

6:30 AM : மும்பையில் அதிகாலை மழைக்கு இடையேயும் பெண் ரசிகைகளும் காலாவை பார்க்க குவிந்தனர். ரசிகர்கள் பலர் காலாவில் ரஜினி அணிந்து வரும் உடையைப் போலவே அணிந்து வந்ததை காண முடிந்தது. தியேட்டர்களில் ரஜினி படத்திற்கு பூஜைகள், பாலாபிஷேகத்திற்கும் குறைவில்லை.

6:00 AM : உலகம் முழுவதும் தியேட்டர் உரிமம், ஆடியோ உரிமம் மூலமாக ரிலீஸுக்கு முன்பே காலா படம் அதன் தயாரிப்பாளர் தனுஷுக்கு 230 கோடி ரூபாயை வசூல் செய்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

5:40 AM : காலா படத்தை வெளிநாடுகளில் பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

5:30 AM : காலா அரசியல் படம் அல்ல. ஆனால் இதில் மக்கள் பிரச்னைகளை பேசியிருக்கிறோம். ரஜினியின் வாய்ஸ் இதில் பவர்ஃபுல்லாக இருக்கும் என படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

5:00 AM: ரஜினிகாந்த்-ன் காலா இன்று (ஜூன் 7) அதிகாலையில் தியேட்டர் திரைகளை தொட்டது. சென்னையில் காலையிலேயே ரசிகர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டனர்.

Rajinikanth Tamil Movie Review Kaala Isaidub Catherine Tresa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment