Kaatrin mozhi Tamil Full Movie Leaked: ஜோதிகா நடிப்பில் வெளியாகி பலமான வரவேற்பை பெற்றிருக்கும் காற்றின் மொழி படத்தையும் சில திருட்டு இணையதளங்கள் வெளியிட்டு விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கம்போல தமிழ் ராக்கர்ஸ் இது குறித்து வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனாலும் சில திருட்டு இணையதளங்கள் இந்தப் படத்தை முழுவதுமாக வெளியிட்டு அதிர வைத்திருக்கின்றன. தமிழ் சினிமா உலகம் என்ன செய்யப் போகிறது?
ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் காற்றின் மொழி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பத்துடம் பார்க்கத் தக்க படமாக இது அமைந்திருக்கிறது.
ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்
காற்றின் மொழி படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸும் வந்தபடி இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சினிமாப் படங்களை திருட்டுத் தனமாக வெளியிடும் இணையதளங்கள் காற்றின் மொழி படத்தையும் வெளியிட்டு விட்டதாக தகவல்கள் பரவியிருக்கின்றன.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்தான் அண்மையில் சவால் விட்டு சர்கார் படத்தை வெளியிட்டது. சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட சன் பிக்சர்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது. அதையும் மீறி சர்கார் படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
"முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்... திருமண ஆசை வந்துடும்"- 'காற்றின் மொழி' ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்
காற்றின் மொழி படத்தை வெளியிடவும் இணையதளங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்தை வெளியிட்டதாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும் வேறு சில பெயர்களில் உள்ள திருட்டு இணையதளங்கள் முழுப் படத்தையும் வெளியிட்டு திரையுலகை அதிர வைத்திருக்கின்றன.
காற்றின் மொழி இப்படி திருட்டுத் தனமாக வெளியான பின்னணியில் தமிழ் ராக்கர்ஸ் இருக்கிறதா? என தெரியவில்லை. இது தொடர்பாக தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் உரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.