கடைக்குட்டி சிங்கத்திற்காக நேர்த்திக்கடனில் இறங்கிய துரை சிங்கம்!

அண்ணன் - தம்பி இருவரும் தற்போது கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்த காட்சிகள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆந்திராவில் உள்ள பிரபல கோவிலில் நேர்த்திக்கடன் செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கும் படம் தான் ‘கடைக்குட்டி சிங்கம்’. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தின் ஹீரோ சூர்யாவின் செல்ல தம்பி கார்த்தி. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம்.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அப்போது மேடையில் பேசிய சூர்யா, கார்த்தி இருவருமே கூடிய விரைவில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். ஏற்கனவே வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீசர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. அதனைத் தொடர்ந்து வெளியான பாடல்களும் லைக்ஸை அள்ளி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் கார்த்திக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால், ’கடைக்குட்டி சிங்கம்’ தெலுங்கில் ’சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. தெலுங்கு மொழிக்கான இசை வெளியீட்டு விழா இன்று(23.6.18) மாலை ஆந்திராவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்ளவதற்காக படத்தின் தயாளிப்பாளரும் நடிகருமான சூர்யா மற்றும் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் அனைவரும் ஆந்திரா சென்றுள்ளனர்.

அக்கா காப்பி கொடுப்பார். ஆனால் அண்ணன் உதை கொடுப்பார்.

இதற்கிடையில் ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சிம்ஹாச்சலம் கோயிலுக்கு சூர்யா, கார்த்தி இருவரும் திடீரென்று சிறப்பு வேண்டுதலுக்கு சென்றனர். சிம்ஹாச்சலம் கோயிலில் விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் காட்சியளிப்பார். இந்த கோயிலில் விஷேசமான பல வேண்டுதல்கள் உண்டு. இதைப்பற்றி கேள்விப்பட்ட அண்ணன் – தம்பி இருவரும் ஒன்றாக சேர்ந்து கோயிலுக்கு சென்றனர். படத்தின் வெற்றிக்காக சிறப்பு பிராத்தன்னைகளையும் செய்தனர்

கடைக்குட்டி சிங்கத்திற்காக துரை சிங்கமும், அண்ணன் தயாரித்த படம் கட்டாயம் லாபம் பெற வேண்டும் என்று சிறுத்தையும் மாறி மாறி வேண்டிக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. திரையுலகில் இவர்கள் இருவரை போன்ற அண்ணன் – தம்பிகள் அரிது என்ற பேச்சு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில், அண்ணன் – தம்பி இருவரும் தற்போது கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்த காட்சிகள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close